பெங்களூரு, ஜூலை 23: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்திய ஒற்றுமை மக்க ளவை தேர்தலுக்கான முன்னோட் டமாகும் என்று விடுதலை சிறுத் தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
பெங்களூருவில் வியாழக்கிழமை (21.7.2022) மேனாள் கருநாடக முதல்வரும், எதிர்க்கட்சித்தலைவரு மான சித்தராமய்யாவை அவரது இல்லத்தில் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்ரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமா வளவன், அம்பேத்கர் சுடர் விருது வழங்குவது குறித்து தெரிவித்து, அந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அளித்தார். இந்த விருதை ஏற்றுக் கொள்வதாகவும், அதை பெற்றுக் கொள்ள சென் னைக்கு வருவதாகவும் சித்தரா மய்யா உறுதி அளித்தார்.
முன்னதாக, இது குறித்து தொல்.திருமாவளவன் செய்தியாளர்களி டம் கூறியது: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2007-ஆம் ஆண்டு முதல் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராஜர் கதிர், அயோத்தி தாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப் பட்டு வருகின்றன. இந்த ஆண்டு முதல் மார்க்ஸ் மாமணி விருதும் வழங்கப்படுகிறது. சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு வரும் தாழ்த்தப்பட் டோர் அல்லாதவருக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படுகிறது. மேனாள் முதலமைச்சர் முத்தமிழ றிஞர் கலைஞர், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி மேனாள் முதல மைச்சர் நாராயண சாமி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள் ளிட்டோருக்கு ஏற்கெனவே அம் பேத்கர் சுடர் விருது வழங்கப்பட் டுள்ளது. அந்த வகையில், 2022-ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருது கருநாடக மேனாள் முதலமைச்ச ரும், எதிர்க்கட்சித்தலைவருமான சித்தராமய்யாவுக்கு வழங்கப்படு கிறது. கருநாடகத்தில் சனாதன சக் திகளை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இடையே நல் லிணக்கம், ஒற்றுமையை ஏற்படுத்தி வருகிறார். மேலும் அச்சமூகங்களின் நலனுக்காக பாடுபட்டுவருகிறார். அவரது பணியை அங்கீகரித்து, ஊக்கப்படுத்தும் வகையில் இந்த விருது சித்தராமய்யாவுக்கு வழங் கப்படுகிறது. இதற்கான விழா சென்னையில் ஜூலை 30-ஆம் தேதி நடக்கிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட் டத்தொடர் தொடங்கியது முதல் முடங்கியுள்ளது. ஜிஎஸ்டி, விலை வாசி உயர்வு, எதிர்க்கட்சிகள் மீது சிபிஅய்-அமலாக்கத்துறையை ஏவுவது குறித்து விவாதிக்க ஆளுங் கட்சி மறுத்துவருவதால், எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்திவரு கின்றன. அதனால் நாடாளுமன்றம் செயல்படாமல் உள்ளது. வயது முதிர்வு, உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டுவரும் சோனியா காந்தியை விசாரணை என்ற பெயரில் பாஜக அரசு தொல்லை கொடுத்துவருகிறது. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளை பலவீனப் படுத்த புலனாய்வு அமைப்புகளை பாஜக அரசு ஏவி வருகிறது.
குடியரசுத்தலைவர் தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு கிடைத்துள்ள வெற்றி எதிர்பார்த்ததே. இத்தேர் தலில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு டன் நிறுத்தப்பட்ட யஷ்வந்த் சின்ஹா கணிசமாக வாக்குகளை பெற்றிருக்கிறார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி களின் சார்பில் மார்க்கரேட் ஆல்வா நிறுத்தப்பட்டிருக்கிறார். குடியரசு துணைத்தலைவர் தேர் தலில் கிறிஸ்துவ சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் நிறுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். குடி யரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க் கட்சிகள் வெளிப்படுத்திய ஒற் றுமை மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாகும். இதே ஒற்றுமை மக்களவைத் தேர்தலிலும் வலுப்பெறும். மேலும் எதிர்க் கட்சிகளின் ஒற்றுமைக்கு இது நம்பிக்கை அளிக்கிறது.
தாழ்த்தப்பட்டோர் அதிக எண் ணிக்கையில் வன்கொடுமைகளுக்கு இலக்காவது குறித்து ஒன்றிய அரசு புள்ளிவிவரங்களை வெளியிட் டுள்ளது. இதில் தமிழ்நாடு முதலி டத்தில் உள்ளது வேதனை அளிக் கிறது. தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை தென் தமிழகத்தில் தொடர்ந்தவண்ணம் உள்ளது. இதை கட்டுப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தக்க நட வடிக்கை எடுத்துவருகிறார். இது தொடர்பாக இரு கூட்டங் களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தியிருக்கிறார். தமிழ்நாடு அரசின் நடவடிக்கை எதிர்காலத் தில் இதுபோன்ற வன்கொடுமை களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மதுரை மாவட்டத்தில் மேலவளவு கிரா மத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்பது குறித்த பலமுறை முறையிட்டுள்ளோம். அங்கு சுடு காட்டுக்கு செல்ல தனிப்பாதை கூட இல்லை.
இது குறித்து தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வு காண்போம் என்றார் அவர்.
நான் பெரியார் கொள்கையில் நம்பிக்கை உள்ளவன்: சித்தராமய்யா
எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமய்யா கூறியது: விடுதலை சிறுத்தைகள் கட்சி வழங்கும் அம்பேத்கர் சுடர் விருதுக்கு என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மரியாதைக்குரிய அந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது பெருமை அளிக்கிறது. அந்த விருதை நான் ஏற்கவிருக்கிறேன். அம்பேத்கர், பெரியார் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. நான் அம்பேத்கர் மற்றும் பெரியார் கொள்கையில் நம்பிக்கை கொண்டவன். அதனால் இந்த விருதை பெறவிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருதை பெற ஜூலை 30-ஆம் தேதி சென்னை செல்கிறேன் என்றார் அவர்.
No comments:
Post a Comment