பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது: மம்தா திட்டவட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 29, 2022

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது: மம்தா திட்டவட்டம்

கொல்கத்தா, ஜூலை 29- 2024-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோல்வி அடையும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா  தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காளத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் மூத்த அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிமீது ஆசிரியர்கள் பணியி டங்களில் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. அவருக்கு நெருக்க மானவர்களின் இடங்களில் நடத் திய சோதனைகளில் பார்த்தா சாட் டர்ஜியின் உதவியாளர் வீட்டிலி ருந்து பெட்டி பெட்டியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பெட்டிகளில் சுமார் ரூ.20 கோடி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டு உள்ளார். 

பார்த்தா சாட்டர்ஜியால் மம்தா அரசுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகா ரத்தை பாஜக கையில் எடுத்து திரிணாமூல் காங்கிரஸ் மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகிறது. இந்நிலையில் மம்தா கொல்கத் தாவில் 27.7.2022 அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், “திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீய நோக்கத்துடன் பிரச் சாரங்கள் செய்யப்படுகின்றன. ஒரு வர் குற்றம் செய்ததாக நிரூபிக்கப் பட்டால் நீதிமன்றம் அவரைக் கண் டிப்பாக தண்டிக்கட்டும். ஆனால், புலனாய்வு அமைப்புகள் அரசியல் கட்சிகளுக்கு அவப்பெயர் ஏற்படுத் தும் நோக்கில் பயன்படுத்தப்படக் கூடாது. நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தை நடத்துகிறீர்கள்.

 அதில், சில தவறுகள் நடக்கலாம். யாராவது ஏதாவது ஒரு தவறை செய்துவிட்டால் அது சட்டப்படி நிரூபிக்கப்பட்டால், அவர்கள் கண் டிப்பாகத் தண்டிக்கப்பட வேண் டும். அந்த விஷயத்தை வைத்து தீய நோக்கத்துடன் பிரச்சாரம் செய் வதைத்தான் நான் எதிர்க்கிறேன். மத்தியில் உள்ள ஆளுங்கட்சியான பாஜகவால் எதிர்க்கட்சி தலைவர் களும் தொழிலதிபர்களும் விசா ரணை அமைப்புகளால் அச்சுறுத் தப்படுகிறார்கள். விசாரணை அமைப்புகள் எந்தச் சார்பும் இல் லாமல் நடந்து கொண்டால் எனக்கு அதில் பிரச்சினை கிடையாது. நாடாளுமன்றத்தில் இதையெல் லாம் எதிர்த்து கேள்வி எழுப்பினால், இடைநீக்கம் செய்து விடுகிறார்கள். 2024-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோல்வி அடையும். நான் எண்ணிக்கையைப் பற்றியும் கூற முடியும். அதனால், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதை உறுதி யாக சொல்வேன்” என்று மம்தா தெரிவித்தார்.

No comments:

Post a Comment