விடுதலையின் பணி குறித்து அறிஞர் அண்ணா படப்பிடிப்பு - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 30, 2022

விடுதலையின் பணி குறித்து அறிஞர் அண்ணா படப்பிடிப்பு

3

“திராவிடனே! உன் சமுதாயம் சேறும் பாசியும் நிறைந்த குட்டைபோல் ஆகி விட்டது. சேறும் பாசி யும் நிரம்பிய குட்டையிலுள்ள நீரை எவரே விரும்புவர்! அந்த நீர் குடிப்பதற்கோ குளிப்பதற்கோ முடியாதபடி ஆக்கப்பட்டுவிட்டது. 

எனவே, அதை உபயோகித்து  நோய்க்கு ஆளாகும்படி செய்து உடலை வதைந்து போகாதே - சேற்றை அகற்றிப் பாசியை நீக்கித் துப்புரவு செய்து உப யோகப்படுத்திக் கொள்” என்று ‘விடுதலை’ கூறுகின்றது.

“ஒரு காலத்தில் நீ உன்னத நிலையில் இருந்தாய். இந்நாட்டு ஆட்சி உன்னுடைய தாய் இருந்தது, ஆனால் இன்று! நீ ஆண் டியாகக் கிடக்கிறாய். வீரனாய் - விறல் வேந்தனாய் இருந்த நீ கோழையாய், பூனையைக் கண்டு அஞ்சும் பேதையாகிக் கிடக்கிறாய். சிம்மாசனத்தில் சிறப்போடி ருந்த நீ இன்று செங்கை ஏந்திச், சேவடி காத்து நிற்கிறாயே! இப்படி நீ ஆனதன் அடிப்படையை உணரவில்லையே!’’ என்று கூறி விளக்கமும்-விழிப்பும் உண் டாக்கி வருகின்றது ‘விடுதலை’.

கீழ்த்தர ஜாதியாய்-நான்காம் அய்ந்தாம் ஜாதியாய் ஆக்கப்பட்டு விட்டாய் உழைத் தாலும் உழைப்பின் பயனை அடைய முடியாதபடி செய் யப்பட்டுவிட்டாய் -பொருளாதாரத்தில் நசுக்கப் பட்டுவிட்டாய் கல்வியில் 100-க்கு 90பேர் தற்குறிகளாய் இருக்கும் கொடுமையைப் பெற்று விட்டாய் அரசியலிலோ பிற துறைகளிலோ கேவலம் கீழ்த்தரச் சிப்பந்தியாய்ச் சீர்குலைக்கப் பட்டு விட்டாய்’’ என்று கூறித் திராவிடப் பெருங்குடி மக்களுக்கு அறிவுத் துறையில் புத்துணர்ச்சியையும். வாழ்க்கைத் துறை யில் வளத்தையும் பெறும்படி ‘விடுதலை’ பணியாற்றி வருகின்றது.

 “திராவிட நாடு ‘’ 27.6.1948


No comments:

Post a Comment