கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 25, 2022

கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

சென்னை, ஜூலை 25  ஒன்றிய அரசு சார்பில் பீடி, சுண்ணாம்புக் கல், டோலமைட் சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒன்றிய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர் களின் குழந்தைகள், 2022-2023-ஆம் நிதியாண்டில் கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. 9-ஆம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.25 ஆயிரம் வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக  https://scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை வலைத்தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப தாரர்களின் ஆதார் எண்ணை, சேமிப்பு வங்கிக் கணக் குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்விஉதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர்.

ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களது விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் செப். 30-ஆம் தேதி. மற்றஅனைத்து உயர் கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் அக்.31-ஆம் தேதி ஆகும்.


No comments:

Post a Comment