‘விடுதலை'யின் பணி - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 30, 2022

‘விடுதலை'யின் பணி

நெய்வேலியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது எனது பிரிவில் ஒரு தீவிர ஆர்.எஸ்.எஸ் காரர் பணியாற்றிக் கொண்டிருந்தார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர் மதவாத இயக்கத்தில் இருக்கிறாரே என்று வருத்தம்தான். எதிர்பாராத விதமாக அவருடைய மகளுக்கு வல்லம் பெரியார் மணியம்மை பெண்கள் தொழில்நுட்ப கல்லூரியில் இடம் கிடைத்தது. அது அவருடைய வாழ்க்கையையே மாற்றி விட்டது.ஆம்! கல்லூரியில் இருந்து அவரது இல்லத்திற்கு ‘விடுதலை’யும் ‘உண் மை’யும் வரத் தொடங்கியது. முதலில் அலட்சியப் படுத்தியவர் பிறகு விடுதலையை படிக்க தொடங்கி விட்டார்.

ஒரு வாரத்திற்குப் பிறகு என்னிடத்திலே வந்து அய்யா நான் விடுதலை படித்து வருகிறேன்.அதில் கூறப்படுவதெல்லாம் உண்மைதானா என கேட்டார் நல்ல வாய்ப்பென்று கருதி ஆரிய திராவிடப் போராட் டத்தினை தெளிவாக கூறி பார்ப்பனியத்தின் சுரண் டலையும் மதவெறியையும் சுட்டிக் காட்டினேன் அடுத்த சில தினங்களிலேயே திராவிடர் கழக கூட் டங்களுக்கு அவரே என்னை அழைக்க முன் வந்தார். அப்பொழுதுதான் அய்யா வீரமணி அவர்களின் அறிவார்ந்த திட்டத்தின் சிறப்பினை உணர்ந்தேன்.இதழ்களும் ஊடகங்களும் கொள்கை விளக்கத்திற்கு எவ்வளவு பெருந்துணை புரிகின்றன என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.

‘விடுதலை’ சமுதாயப் பணியில் ஈடு இணையற்ற இதழ்..நாடிழந்து, மொழி இழந்து, இன வரலாறு மறந்து அடிமைகளாக சொந்த நாட்டிலேயே ஏதிலிகளாக வாழ்ந்த தமிழர்களின் நிலையை தலைகீழாக புரட்டிப் போட்ட புரட்சி ஏடு ‘விடுதலை’ அய்யாவின் எண் ணங்கள் வரிவடிவம் பெற்று உலகத் தமிழர்களின் உள்ளங்களை சென்றடைய வழி செய்த ஏடு ‘விடுதலை‘.

தமிழினத்தின் விடுதலைக்கு குரல் கொடுக்கும் ‘விடுதலை‘ வாழ்வியல் சிந்தனைகளை வாரி வாரி வழங்கும் ஏடு ‘விடுதலை‘.

அய்யா காலத்திலேயே பயிற்சி பெற்று அய்யாவுக் குப் பிறகும் கழகத்தையும் ‘விடுதலை’ இதழையும் தொய்வில்லாமல் வெற்றியின் உச்சிக்கு அழைத்துச் செல்வதிலே வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார் ஆசிரியர் வீரமணி அவர்கள்.

- நெய்வேலி க. தியாகராஜன் 

கொரநாட்டு கருப்பூர்

('விடுதலை' பவள விழா மலரில் இருந்து)

No comments:

Post a Comment