“2000” விடுதலை சந்தாக்களை சேர்ப்பது என தஞ்சை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 13, 2022

“2000” விடுதலை சந்தாக்களை சேர்ப்பது என தஞ்சை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

தஞ்சை, ஜூலை 13 30.06.2022 வியாழன் அன்று மாலை 6:30 மணி அளவில் தஞ்சாவூர் கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் தஞ்சை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார், தஞ்சை மண்டல செயலாளர் க.குருசாமி, தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினார்.

தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன் அனை வரையும் வரவேற்று உரையாற்றினார்.  கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கலந்துகொண்டு மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேறப் பட்ட தீர்மானங்களை செயல்படுத்துவது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுதலைக்கு ஆசிரியராக பொறுப் பேற்று 60 ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு 60,000 விடுதலை சந்தாக்களை சேர்ப்பது, ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் இளைஞரணி மாநில மாநாட்டுக்கு நிதி திரட்டுவது, அதிகப்படியான இளைஞர்களை பேரணியில் பங்கு பெறச்செய்வது உள்ளிட்ட கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கி உரையாற்றினார்.

கருத்துரையாற்றியோர்

பூதலூர் ஒன்றிய தலைவர் அள்ளுர் இரா.பாலு, உரத்தநாடு நகர இளைஞரணி தலைவர் பு.செந்தில்குமார், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் அரங்கராசு, ஒரத்தநாடு ஒன்றிய அமைப்பாளர் மாநல்.பரமசிவம், திருவையாறு ஒன்றிய ப.க. தலைவர் தமிழரசன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் களிமேடு அன்பழகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பாவலர் பொன்னரசு, மண்டல மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி, மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே. இராஜவேல், தஞ்சை மாநகர அமைப்பாளர் வன்னிப்பட்டு தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பா விஜயகுமார், மாவட்ட மாணவர் கழக துணை செயலாளர் விடுதலை அரசி, பகுத்தறிவாளர் கழக பேராசிரியர் இரா.மணிமேகலை, சாமி.கலைச் செல்வன், ஒரத்தநாடு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரப் பாண்டியன், மாவட்ட விவசாயணி செயலாளர் பூவை. இராமசாமி, மாவட்ட ப.க. துணை தலைவர் பெரியார் கண்ணன், மாவட்ட தொழிலாளரணி தலைவர் செ.ஏகாம்பரம், மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, மாநில கலைத்துறை செயலாளர் சசித்தர்த்தன், மாநில ப.க. துணை தலைவர் கோபு பழனிவேல், பகுத் தறிவாளர் கழக மாநில ஊடகப்பிரிவு தலைவர் 

மா.அழகிரிசாமி, மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், மற்றும் இறுதியாக தஞ்சை மாவட்ட தலைவர் சி அமர்சிங் தலைமை உரை யாற்றினார். தஞ்சை மாநகர செயலாளர் கரந்தை அ.டேவிட் அனைவருக்கும் நன்றி கூறினார்.

பங்கேற்றோர்

ராஜகிரி த.பாண்டியன், மகளிரணி அமைப்பாளர் பாக் கியம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர் நிலவன், தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார்செல்வம், ஜெயமணி குமார், தஞ்சை ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் சோ.ராமகிருஷ்ணன், பொறியாளர் பாலகிருஷ்ணன், மற்றும் கழக பொறுப் பாளர்கள் தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம்:1

மாநில வீதி நாடக கலைக்குழு அமைப்பாளர் தெற்கு நத்தம் பி.பெரியார்நேசன் தாயார் கலியாத்தாள், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் தெற்கு நத்தம் அ.சுப்பிரமணியன், அ.தனபால் ஆகியோரின் தந்தை சி.அய்யாக்கண்ணு, பூதலூர் ஒன்றிய தலைவர் அள்ளூர் இரா.பாலுவின் தாயார் மருதம்பாள், திருவையாறு கவுதமன் தாயார் கோ.கவுசல்யா, கண்ணைக் கிழக்கு சோ.ராமகிருஷ்ணன் தாயார் பாப்பம்மாள், அம்மாபேட்டை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுடரொளி தாயார் மா.செண்பகவள்ளி ஆகியோரது மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்:2

25.06.2022 அன்று மதுரையில் நடைபெற்ற கழக பொதுக்குழு கூட்ட தீர்மானங்களை ஏற்று செயல் படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்:3

 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுதலை ஆசிரியராக பொறுப்பேற்று 60ஆவது ஆண்டு மகிழ்வாக 60,000 விடுதலை சந்தாக்கள் வழங்குவது என மதுரை பொதுக்குழுவின் முடிவை ஏற்று தஞ்சாவூர் மாவட் டத்திற்கு ஒதுக்கப்பட்ட 200 நபர்கள் 10 சந்தா வீதம் 2000 விடுதலை சந்தாக்கள் திரட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கி மகிழ்வது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்:4

ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் கழக இளைஞர் அணி மாநில மாநாட்டிற்கு தனி வாகனத்தில் சென்று பங்கேற்பது எனவும் இளைஞரணி சீருடை அணி வகுப்பில் இளைஞர்களை பெருமளவில் பங்கேற்க செய்வது எனவும், பெரியார் சமூக காப்பணி பயிற்சிக்கு இளைஞரணி, மாணவர் கழக தோழர்கள் 10 நபர்களை அனுப்புவது எனவும், மாநாட்டை விளக்கி மாவட்ட முழுவதும் சுவர் எழுத்து பிரச்சாரம் செய்வது எனவும், ஜூலை 3 முதல் மாவட்டம் முழுவதும் கடைவீதி மற்றும் பிரமுகர் வசூல் பணியை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment