சென்னை, ஜூலை23- தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேலும், தந்தைபெரியார் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கான வினா விடைப் போட்டி நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வி ஆணையரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையரகம், சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அவர் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளவும், பள்ளி மாணவர்களிடம் அறிவியல் மற்றும் சமூகவியல் சிந்தனை களை வளர்க்கும் வகையிலும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில்
‘பெரியார் 1000’ என்ற தலைப்பில் வினா - விடைப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நிகழாண்டுக்கான வினா- விடைப் போட்டி ஆகஸ்ட் 19 முதல் 21 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்தப் போட்டி யில் அனைத்து வகை பள்ளிகளில் இருந்தும் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர் கள் பங்கேற்கலாம். இதில் கலந்துகொள்ளும் ஒவ் வொரு பள்ளிக்கும் தலா 3 பரிசுகள் தரப்படும். எனவே, இந்த போட் டியை கல்வி இணை செயல்பாடு மன்றங்கள்மூலம் அனைத்து பள்ளி களிலும் மாணவர்களின் நலன் பாதிக்காதவாறு நடத்திட அனுமதி வழங்கப்படுகிறது. இதுகுறித்த வழிகாட்டுதல்களை பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு, முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.
-இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு
தொடர்பு கொள்வீர்:
98655 91918 / 94423 98287
99944 58440 / 91235 99312
No comments:
Post a Comment