சில ஆய்வுகளின்படி, அய்ரோப்பாவில் விற்கப்படும் பாதி பழங்களில் பூச்சி மருந்து நச்சு படிந்திருக்கிறது. இந்த நச்சு, பழங்களை உட்கொள்வோருக்கு பல நோய்களை, குறைபாடுகளை உண்டாக்குகிறது.
ஆனால், பூச்சி மருந்து பழங்களின் மேல் படிந்துள்ளதா என்பதை சோதிப்பதற்கு அதிக நேரமும், செலவும் ஆகும். எனவே, இந்த சிக்கலைத் தீர்க்க ஒரு புதிய உணரியை உருவாக்கியுள்ளனர் சுவீடனிலுள்ள கரோலின்ஸ்கா ஆராய்ச்சி நிலையவிஞ்ஞானிகள். மிகவும் நேனோ அளவில் உள்ள இந்த உணரிகளை பழங்களின் மேல் தூவிவிடவேண்டும். பின் அந்த உணரிகளை லேசரால் தூண்டினால் கிடைக்கும் அதிர்வுகளை வைத்து, பூச்சி மருந்து நச்சு உள்ளதா என்பதை கண்டறியலாம்.
இந்த உணரியை பெரிய கிடங்குகள் முதல் சிறிய கடைகள் வரை எங்கும் பயன்படுத்த முடியும் என்பதோடு அதிக செலவும் ஆகாது என கரோலின்ஸ்கா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment