வாஜ்பேயும் - இந்தியும்!
அரசுடைமை ஆக்கப் பட்ட வங்கித் தேர்வுகளில் மாநில மொழிகளுக்கு இட மில்லை. இந்தி, இங்கிலீஷ் மொழிகளில் மட்டுமே தேர்வு எழுதலாம் என்பதை எதிர்த்து திராவிட மாணவர் கழகம், இளைஞரணி, மகளிர் பாசறை ஆகியோரால் தமிழ்நாடு எங்கும் 59 மாவட்டங்களில் கடந்த 24.5.2022 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சி முறுக்கோடு நடைபெற்றது.
நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டின் வங்கிகளில் பணி நியமனம் செய்யப் பட்ட 843 எழுத்தர் (கிளார்க்) பணிகளில் 50 விழுக்காட்டினர் வெளி மாநிலத்தவர் என்றால், இந்தக் கொடுமையை இரத்தக் கொதிப்பை என்னவென்று சொல்லுவது!
ஒன்றிய தேர்வாணை யம் நடத்தும் பணிகளுக் கான தேர்வின் விளைவு என்ன? 2013 முதல் 2016 வரை நடத்தப்பட்ட தேர் வில் தமிழ்நாட்டில் வட நாட்டுக்காரர்களுக்குக் கிடைத்த இடங்கள் 1988 பேர் - தமிழர்களுக்குக் கிடைத்ததோ வெறும் 110 பேர்.
இந்த இடத்தில் ஒரு தகவலைச் சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். புருவத்தை ஏற்றி இறக்கிப் பார்க்கவும் கூடும்.
1994 மே திங்களில் நாடாளுமன்ற இரு அவை களும் அமளிக்காடாகின. எந்தப் பிரச்சினைக்காம்?
'ஒன்றிய தேர்வாணை யம் நடத்தும் தேர்வுகளில் மாநில மொழிக்கு இடம் இல்லாதது ஏன்?' என்ப தற்கான கேள்விப் பீரங் கியில் வெடித்த வெடி குண்டுகள்தான் அவை!
சரி... இந்தப் பிரச் சினையைக் கிளப்பியவர்கள் யார்? பி.ஜே.பி.யின், பிதாமகர் அடல்பிஹாரி வாஜ்பேயி (மக்களவையில்), விஜய்குமார் மல்ஹோத்ரா (மாநிலங்களவையில்) ஆகியோர்தான் இந்தப் பிரச்சினையை எழுப்பினார்கள் - அமளிப் படுத்தினார்கள். 50 நிமிடங் கள் அனல் கட்டிகள் பறந்தன.
ஒரு கட்டத்தில் காங் கிரஸ் உறுப்பினர் மணிசங்கர் அய்யர் குறுக்கிட்டார். ''ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கக் கூடாது என்று கூறுவோர், இந்தி வெறியர்கள், ஆபத்தான அரசியல் நடத்துபவர்கள்'' என்றாரே பார்க்கலாம்.
ஒன்றிய தேர்வாணை யம் நடத்தும் தேர்வுகளை அனைத்து இந்திய மொழிகளிலும் நடத்தவேண் டும் என்று குரல் கொடுத் தவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் மேனாள் குடியரசுத் தலைவர் ஜெயில் சிங், மேனாள் பிரதமர் வாஜ்பேயி (பி.ஜே.பி.), மேனாள் பிரதமர் வி.பி.சிங் ஆகியோர் ஆவர் ('விடுதலை', 13.5.1994,
பக்கம் 1).
ஒன்றிய தேர்வாணைய அலுவலகத்தின் முன் இந்தப் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட் டதையொட்டி, நாடாளு மன்றத்தில் இந்தப் போர்க் குரல் என்பது அடிகோடிட்டுக் காட்டத்தக்கதாகும். 28 ஆண்டுகளுக்குமுன் நடந்த அதே போராட்டத்தை இப்பொழுது திராவிடர் கழகம் நடத்தியது என்பது கவனிக்கத்தக்கது.
பி.ஜே.பி.யைச் சேர்ந்த வாஜ்பேயி அன்றைக்கு அதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். இன்றைக்கு அதே வாஜ்பேயி கட்சியான பி.ஜே.பி. அதற்கு எதிரான நிலையில் தேர்வு நடத்து கிறதே!
எல்லாவற்றிற்கும் முடிவு காண்போம் - 4 ஆம் தேதி இந்தி எதிர்ப்பு மாநாட்டில் சந்திப்போம்!
- மயிலாடன்
No comments:
Post a Comment