மொழிக்கான உரிமைகளைப் பெறுவதில் தமிழர்களைப்போல் போராட வேண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 10, 2022

மொழிக்கான உரிமைகளைப் பெறுவதில் தமிழர்களைப்போல் போராட வேண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா

திருப்பதி, ஜூன் 10- மொழிக்கான உரிமை களைப் பெறுவதில் தமி ழர்களைப்போல் போராட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தியுள்ளார். 

ஆந்திர மாநிலம் திருப்பதி எஸ்.வி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மற்றும் காவல் உயரதிகாரிகளுக்கான கலந் தாலோசனை கூட்டத்தில் பேசிய என்.வி. ரமணா, இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளார். 

தாய்மொழியை பாதுகாப்பது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மொழி உரிமைகளை பெற தமிழர்களைப்போல் போராட வேண் டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழர்களை உதாரணமாக எடுத்துக் கொண்டு தெலுங்கர்கள் அனைவரும் தங்கள் மொழிக்காக ஒன்றுபட வேண்டும் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேட்டுக் கொண்டுள்ளார். செம் மரம் கடத்தலில் ஈடுபடுவர் களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண் டனை போதாது என்று கூறி யிருக்கும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தண்டனைக் காலத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

அரிய மரங்களை வெட்டுவது கொலைக் குற்றத்திற்கு சமம் என்று கூறியுள்ள ரமணா, செம்மரங்கள் அழிந்து வரும் தாவரங்கள் பட்டியலில் இருப்பதால் அவற்றை காக்க வேண்டியது நமது கடமை என்று கூறி யுள்ளார்.

No comments:

Post a Comment