புதுடில்லி. ஜூன்.30 ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் சண்டிகரில் நேற்று (29.6.2022) தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முதல் நாளான நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரி அதிரடியாக உயர்த்த ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத் தின் 2 ஆம் நாளான இன்று மேலும் பல பொருட்களுக்கான வரிகளை அதிரடியாக உயர்த்த ஜி.எஸ்.டி கவுன்சில் ஒப்புதல் வழங்கி யுள்ளது. எல்.இ.டி விளக்குகளுக்கு ஜி.எஸ்.டி வரி 12%இ-ல் இருந்து 18 சதவீதம் உயர்த்தப்பட் டுள்ளது. சூரியசக்தியில் இயங்கும் ஹீட்டர் களுக்கான ஜி.எஸ்.டி வரி 5இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிப்பு சில தோல் பொருட்களுக்கான வரி 5-%இல் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது. பேனா, மை, கத்தி, பிளேடு ஸ்பூன்களுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதம் அதிகரிப்பு கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 % இல் இருந்து 18 % ஆக உயர்வு சாலைகள், பாலங்கள், ரயில்வே, மெட்ரோ, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட ஒப்பந்தப் பணிகளுக்கான ஜி.எஸ்.டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்ந்துள்ளது.
Thursday, June 30, 2022
ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. கொள்ளை கரண்டி, கத்திக்குக்கூட ஜி.எஸ்.டி. வரியாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment