அய்தராபாத், ஜூன் 30- நரேந்திர மோடி பிரதமரான பிறகு, 8 மாநிலங்க ளில் பாஜக ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றியிருப்பதாக தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகரராவின் மகனும், மாநில அமைச்சருமான கே.சி. ராமாராவ் கூறியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் குறிப்பிடுகையில், நரேந்திர மோடி பிரதமரான பிறகு, பாஜகவினர் மகாராட்டிராவில் மட்டுமல்லாமல் சுமார் 8 வெவ்வேறு மாநிலங்களில் ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதித்து விட்டு, அரசாங்கங்களை அகற்றியுள்ளனர்.
கருநாடகா, மத்தியப்பிர தேசம் மற்றும் கோவா, இப்போது மகாராட்டிரா. அதற்கு முன்பும் பல மாநிலங்களில் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் அந்த மாநிலங்களில் இந்த செயல்களை மேற்கொண்டனர். அதனால்தான் அரசமைப்பு இயந்திரத்தை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது என்று சொல்கிறேன். இன்று சர்வாதிகாரம் நிலவுகிறது. இந்த சர்வாதிகாரத்தை நிறுத்த யாராவது குரல் எழுப்ப வேண்டும். ஒரு வேளை அந்தக் குரல் தெலங்கானாவில் இருந்தும் எழலாம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும்? இவ்வாறு கே.சி. ராமாராவ் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment