சென்னை, ஜூன் 30 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப்பாடமாக படிக்கும் மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தனிக்கட்டணம் 200 ரூபாய் ரத்து செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, '2022-2023ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித்துறை மானியக்கோரிக்கையின்போது, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப்பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் இருந்து ரூ.200 தனிக்கட்டணமாக வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும்.இதனால் ஆண்டுதோறும் 3 லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள். இதற்காக ஆகும் செலவினம் 6 கோடியை அரசு ஏற்கும்’ என அறிவித்துள்ளார்.
இதனை செயல்படுத்தும் விதமாக பள்ளி கல்வித் துறைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அர சாணையில்,’அரசுப் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பில் கணினி அறிவியலை விருப்பப் பாடமாக படிக்கும் மாணவர்கள் செலுத்தும் தனிக்கட்டணம் ரூ.200 நடப்பு 2022-2023ஆம் கல்வி ஆண்டில் இருந்து ரத்து செய்யப்படுகிறது. இதனால் லட்சத்து 50ஆயிரம் மாண வர்கள் பயன் அடைவார்கள். இதற்கான கட்டணத்தை அரசு செலுத் தும்’ எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment