புதுடில்லி, மே. 31- நாட்டில் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி குறிப்பாக 500 ரூபாய் கள்ள நோட் டுகள் 2 மடங்காக அதி கரித்துள்ளதாக தெரிவித் துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு உயர் மதிப்புகளை கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழந்ததாக பிரத மர் மோடி அறிவித்தார்.
உயர் மதிப்புள்ள நோட்டுகளால் தான் ஊழல், கருப்புப் பணம், கள்ளநோட்டு புழக்கம் போன்ற மோசடிகள் நடப்பதாக கூறிவிட்டு அதை விட அதிக மதிப் புள்ள 2000 ரூபாய் நோட் டுக்கள் வெளியிடப்பட் டது சர்ச்சையானது. பண மதிப்பு இழப்பு நடவ டிக்கை தோல்வி அடைந் ததாக பொருளாதார நிபுணர்கள் கூறி வந்த நிலையில், அதனை உறுதி செய்யும் வகையில் கள்ள நோட்டுகளின் எண் ணிக்கை அதிகரித்துள் ளது. அதன் எதிரொலியா கவே 2000 ரூபாய் நோட் டுக்கள் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி படிப்படி யாக குறைத்து வருகிறது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட் டுள்ள அறிக்கையின் படி, 2021ஆம் ஆண்டு வங்கி களால் கண்டுபிடிக்கப் பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண் ணிக்கை 39,453 ஆக இருந் தது. 2022ஆம் ஆண்டில் 500 ரூபாய் கள்ள நோட் டுகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிக ரித்து, அதாவது 101.9% உயர்ந்து 70,666 என்ற எண்ணிக்கையை தொட் டது. 2000 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண் ணிக்கை 8,798இலிருந்து 54% உயர்ந்து 13,604 ஆக தொட்டுள்ளது. அதே சமயம் 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப் பது குறைக்கப்பட்டு இருப்பதால் அதன் எண்ணிக்கை 1.6% குறைந் துள்ளது. அதற்கு நேர் மாறாக கடந்த ஆண்டு 3,867 கோடி என்ற எண் ணிக்கையில் அச்சடிக்கப் பட்ட 500 ரூபாய் நோட் டுக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 4,554 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே 200,100, 50,10 ரூபாய் கள்ள நோட் டுக்கள் அச்சடிப்பது குறைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
காங்கிரஸ்
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ள காங் கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 'பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற் பட்ட கெட்டவாய்ப்பான ஒரே சாதனை இந்திய பொருளாதாரத்தை மூழ்கடித்ததுதான் என்று கூறியுள்ளார். கள்ள நோட்டுகள் நடமாட்டம் அதிகரித்தது தொடர் பான புள்ளி விவரத்தை யும் தமது ட்விட்டர் பக் கத்தில் அவர் இணைத்து உள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ்
திரிணாமுல் காங்கி ரஸ் தலைவர்களின் ஒரு வரான தெரிக் ஓப்ரயனும் கள்ளநோட்டுகள் அதிக ரித்தது குறித்து பிரதமர் மோடியை தமது ட்விட் டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார். பண மதிப் பிழப்பு நடவடிக்கை உங் களுக்கு நினைவு இருக் கிறதா என வினவியுள்ள அவர், இது தான் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் உங்கள் நடவடிக்கையால் கிடைத்த பலனா என கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவசேனா
சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி உள் ளிட்டோரும் ரிசர்வ் வங்கி அறிக்கையை சுட்டிக் காட்டி மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பலன் வெளிவந்துவிட்டதாக விமர்சித்துள்ளனர்.
No comments:
Post a Comment