புதுடில்லி, மே 31- சிபிஎம் தேசிய பொதுச்செயலா ளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், இந்தியாவில் “சப்பாத்தி நெருக்கடி” உருவாகி கொண்டுள்ளது என்பது செய்தி. மோடி அரசு பண மதிப்பு நீக் கம்,ஜிஎஸ்டி,கோவிட் மோசமாக கையாண்டது உள்ளிட்ட பல்வேறு மக் கள் விரோத நடவடிக்கை களின்மூலம் வாழ்வாதா ரங்களை அழித்தது.
இப்பொழுது உண வுப் பற்றாக்குறை-குறிப் பாக கோதுமை கொள் முதல் வீழ்ச்சி. இலவச உணவுப் பொருட்களை ஏழைகளுக்கு வழங்கவேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை மூலம் கொள்முதல் செய்வதை வலுப்படுத்த வேண்டும்.பொது விநியோக முறையை சீர் படுத்த வேண்டும். “கற்றல் இழப்பு” அதாவது நீண்ட காலத்துக்கு பள்ளிகள் மூடப்பட்டதாலும் இணைய கல்வி இடைவெளி கார ணமாகவும் இந்தியாவின் ஜிடிபி 3.19 சதவீதம் (99 பில்லியன் டாலர்/ரூ7,43,000 கோடி) இழப்பு ஏற்படும். தெற்கு ஆசியா வில் இந்தியாவின் இழப்பு தான் மிக அதிகம்! கல்வி உரிமை சட்டத்தை உட னடியாக மோடி அரசு இயற்ற வேண்டும்.
“உலகிலேயே மிக வேக மாக வளர்வது இந்தியா வின் பொருளாதாரம் தான்” என மோடி அரசு வாய்ப்பந்தல் போடுகி றது. ஆனால் மோடி அர சின் முன்னாள் நிதி செய லாளர் வரலாறு காணாத நிதி பற்றாக்குறை; 30 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வு ; சரிந்து வரும் அந்நிய செலவாணி; மிகக் குறைவான ஜிடிபி வளர்ச்சி என இந்த ஆட் சியில் பொருளாதாரம் எப்படி சிதைந்து போனது என பட்டியலிடுகிறார். மோடியின் பொருளா தார கொள்கைகளிலி ருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும். -இவ் வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment