புதுடில்லி, ஏப் 4 சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதா தொடர் பாக ஆளுநர் முடிவெடுத்து ஒப் புதல் தர கால நிர்ணயம் வகுக்கும் வகையில் அரசமைப் புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென தி.மு.க. உறுப்பினர் பி.வில்சன் மாநிலங்களவையில் தனி நபர் மசோதா தாக்கல் செய்தார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரின் விடுதலை, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரிய மசோதா ஆகி யவை ஆளுநருக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளன. இதில் நீட் விலக்கு மசோதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டு ஆளுநருக்கு அனுப் பப்பட்ட நிலையில் 142 நாள்கள் கழித்து ஆளுநரால் திருப்பி அனுப்பப் பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ர வரி 8ஆ-ம் தேதி ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்ட முன் வரைவை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய தமிழ்நாடு அரசு அதை அதே நாளில் ஆளுநருக்கு அனுப்பியது. தற் போது ஏறக்குறைய 2 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இந்த மசோதா மீதும் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை.
நாடாளுமன்ற மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு எழுத்து மூலம் விடையளித்த ஒன்றிய சுகாதாரத்துறை இணைய மைச்சர் பாரதி பவார், ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவருக்கு அனுப் பப்படும் அனைத்து சட்ட மசோதாக்களும் உள்துறை அமைச் சகத்தின் மூலம்தான் கையாளப் படும் எனவும், நீட் விலக்கு சட்ட மசோதா ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு வந்ததாக எவ்வித தகவல் இல்லை எனவும் தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதனால் நீட் மசோதா மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் வைத்திருப்ப தால் இந்த ஆண்டும் மாணவர்கள் பாதிக்கக் கூடிய சூழல் ஏற்பட் டுள்ளது.
இது தொடர்பாக இந்திய அரசமைப் புச் சட்டம் உறுப்புரை 200-இல் திருத்தங்கள் மேற்கொ ள்வது பற்றிய தனி நபர் மசோ தாவினை நாடாளுமன்ற மாநிலங் களவையில் அறிமுகம் செய்து பேசிய பி. வில்சன் அரசமைப்புச் சட்ட உறுப்புரை 200-இல், மசோ தாக்களின் மீது ஆளுநர்கள் முடி வெடுக்கவும், முடிவு களை நிறுத்தி வைக்கவும், குடியரசுத்தலை வரின் பரிசீலனைக்கு அனுப்பவும் உரிய காலக்கெடுவை நிர்ணயம் செய்யும் வகையில் திருத்தம் செய்ய முன் மொழிவதாகத் தெரிவித்தார்.
இந்த சட்டம் அரசமைப்புச் (திருத்த) சட்டம், 2022 என அழைக் கப்படலாம், எனவும், இந்தியக் குடியரசுத்தலைவரால் ஒப்புதல் அளிக்கப்படும் நாளில் இருந்து, இந்தச் சட்டம் உடனடியாக அமல் படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்புரை 200இல், Governor shall எனும் வார்த்தைகளுக்கு பின்பாகவும், “declare” எனும் வார்த் தைக்கு முன்பாகவும், within a period of two months எனும் சொற்றொ டரை இணைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அதேபோல, “provided that the governor may” எனும் வார்த் தைகளுக்குள் பின்னர், உள்ள “as soon as possible” எனும் வார்த்தை களுக்கு பதில் “with in a period of month” என மாற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
முதல் விதியில், “provided that the governor may” எனும் வார்த்தை களுக்குப் பின்னர், “as soon as possible” எனும் வார்த்தைகளுக்கு பதில்“within a period of one month” என மாற்றப்பட வேண்டும் என அவர் அந்த தனி நபர் மசோதாவில் தெரிவித்தார்.
மேலும், இரண்டாம் விதியில், “form the date of receipt of the bill” எனும் வார்த்தை களுக்கும் பிறகு, “within a period of one month from the date of receipt of the bill”என்பது இணைக்கப்பட வேண்டும் எனக் குறிப் பிட்டுப் பேசினார்.
அரசமைப்புச் சட்ட உறுப்புரை 200-இல் கால வரம்பு என்று ஏதும் குறிப்பிடப் படாததால், மசோதாக் களின்மீது முடிவெடுப்பதை தாம தப்படுத்த, அளவற்ற அதிகாரத்தை ஆளுநர்களுக்கு அது வழங்குவ தாகவும், அந்த காலவரம்பை நிர்ண யிக்காமல் இருப்பது மக்கள் நலனுக்கு முட்டுக்கட்டையாகவும், எதேச்சதிகாரத்தையும் அனுமதிப்ப தாகவும் தெரிவித்த அவர், மக்களின் விருப்பத்தை சம நிலைப்படுத்தும் வகையில், போதுமான காலக்கெடு விற்குள் ஆளுநர்கள் முடி வெடிக் கும் வகையில் இந்த விதியானது திருத்தம் செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment