சென்னை, ஏப்.9- சட்டப்பேரவையில் நேற்று (8.4.2022) கேள்வி நேரத்தின் போது பூவிருந்தவல்லி கிருஷ்ணசாமி(திமுக) பேசுகையில், பூவிருந்தவல்லி தொகுதியில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரியை துவக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்றார். இதற்கு பதிலளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது:
பூவிருந்தவல்லி தொகுதியில் 3 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 1 அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரியும், 33 சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளும் உள்ளதாகவும்,இது தவிர தொழில்நுட்பக் கல்லூரிகள், பல வகை தொழிநுட்பக் கல்லூரிகளும் உள்ளன.
மேலும், பூவிருந்தவல்லி தொகுதியில் உள்ள அரசுக்கல்லூரிகளில் இருக்கும் காலியிடங்களில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள, தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் 25% இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு அரசு கலை, அறிவியல் கல்லூரி கூட இல்லாத தொகுதிகள் நிறைய உள்ளன.
எனவே அரசுக்கல்லூரியே இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை அளித்தும், பிற தொகுதிகளில் புதிய கல்லூரிகளைத் தொடங்குவது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்.
No comments:
Post a Comment