ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 4, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைப்பு, காங்கிரசையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கருத்து.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

தமிழ்நாட்டின் உரிமைக்காக தான் டில்லி சென்றேன் என்றும், நான் கலைஞருடைய மகன், என்றைக்கும் தமிழ்நாட்டுக்காக உழைப்பேன் என்று முதலமைச்சர் மு..ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

அரித்வாரில் முஸ்லீம்கள் குறித்து பேசி கைதாகி, தற்போது பிணையில் வந்துள்ள .பி. காஜியாபாத் தஸ்னா தேவி கோயில் தலைமை அர்ச்சகர் யாதி நர்சிங்கானந்த், ஹிந்துக்கள் அனைவரும் ஆயுதம் ஏந்த வேண்டும் என தலைநகர் டில்லியில் மீண்டும் வன் முறைப் பேச்சு.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment