வாய்மை - வலிமை கொண்ட பெரியாரின் பேராயுதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 4, 2022

வாய்மை - வலிமை கொண்ட பெரியாரின் பேராயுதம்

 ஆரிய இனத்தின்  ஆதிக்கத்தை எதிர்த்து மொழியுணர்வுடன் இன உணர்வூமூட்டிய நீதிக்கட்சியின் முப் படைத் தளபதிகள் சர் பிட்டி தியாக ராயர், டாக்டர் சி.நடேசனார், டி.எம். நாயர் நம்மிடையே இன்றில்லை!!

இவர்கள் திராவிடம் காக்கும் பணியை  விட்ட இடத்திலிருந்து தொட் டுத் தொடர்ந்திட்ட திராவிடத்தின் முப்படை நாயகர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் பெருந்தகை, முத்தமிழறிஞர் கலைஞர் மூவரும் தம் இயக்கத்தை நிறுத்திக் கொண்டனர்!!

வாழையடி வாழையாக வந்து வண்டமிழ் மரபு காத்த, மாத்தமிழர் இயக்கமாம் திராவிட இயக்கத்தை வழி நடத்த பெரியார் தந்த பேராயுதம்!!

திராவிட இயக்கக் கருத்துக் கருவூலம், ஓயாமல் ஓடும் காலத்தின் கடிகாரம், சுழலும் பூமி தான் சுற்றுவதை நிறுத்தினாலும் ஒடுக்கப்பட்டோர் உயர்வு பெற, தாழ்த்தப்பட்டோர் தரம் உயர்த்திட அணுப்பொழுதும் நிற்காமல் சுற்றிச் சுழலும் நம் தந்தை  பெரியாரின் திடமே! திராவிடத்தின் திடலே!!

மானமிகு ஆசிரியர் - தமிழர் தலைவர் அவர்கள் தமிழகம் முழுக்க நாகர் கோயில் தொடங்கி சென்னை வரை 21 நாள்கள் சூறாவளிச் சுற்றுப் பயணம் தொடங்கியிருக்கிறார்!!

நீட்தேர்வை ஒழிக்க !

புதிய கல்விக் (காவிக்)கொள் கையை எதிர்த்து, அதோடு இந்திய ஒன்றிய அரசின் பாசிசப் போக்கை எதிர்த்தும்,  மாநில உரிமையை மீட் கவும் களமமைத்து அனைத்துக் கட்சி தலைவர்களுடன் கைகோர்த்து

திராவிட இனத்திற்கு எதிராக தமிழ் தேசியம் என்றும்,

ஈழத்தமிழர் விடுதலை என்றும் , கருப்புக்கு எதிராக நீலத்தை நிலை நிறுத்தும், ஆரியத்தின் சூழ்ச்சியை வேரறுத்து, பார்ப்பனீயத்தின்  பண்பாட் டுப் படையெடுப்பை மீட்டுருவாக்கம் செய்திடவும்....

வந்து சேர்ந்த வயோதிகத்தைக் கூட வழியனுப்பி விட்டு திராவிடத்தின் வாலிபத்தை துணைக் கொண்டு கருப்பு மெழுகுவர்த்தியாய் நாளும்  கருத் தொளி பரப்பும் எங்கள் தமிழர் தலைவரே !!

திராவிடத்தின் கையிருப்பே !!

பம்பரமும் ஓய்வு பெறும் சுற்றிய பின், இவரோ படுகிழமாய் போன பின்னும் பம்பரமாய் சுற்றி வந்தார் என்று பெரியாருக்கு கலைஞர் சொன்ன கவித்துவமான வரிகள் பெரியாருக்கு மட்டுமல்ல! இவருக்கும் சரியாகப் பொருந்தும்!!

சுற்றிவரும் இச்சூரியனுக்கா வயது 90! தன் அனுபவத்தையே வாழ்விய லாக போதிக்கும் பெரியாரின் அடிச் சுவடு,

இவரது பயணத்தின் நோக்கம், பதவியா? பட்டமா ? படாடோபமா? ஏதுமில்லை !!

வான்பொழியும் மழைக்கும்   நில மோடும் நதிக்கும் தன்னலம் என்று ஏதுமில்லை !

'திராவிடமாடல்' என்ற திமுக வின் ஆட்சியை, தளபதி முத்துவேல் கலை ஞர்  ஸ்டாலின் அவர்களின் ஆட்சியை காக்கும் காவலரண் ! 

காவி நெருப்பு நாற்புறமும் சுழன் றடிக்க ....

கமழும் கற்பூரமாய் தமிழகம் எதிர்த்து நின்று ...  தமிழ் காக்க,  தமிழர் தம் மானம் காக்க

சமுகநீதி காக்கும் சரித்திர நாயகன் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதிக்கு உற்ற துணை!! கொள்கைக் காவலர்!! பெரி யாரின் தத்துவத்திற்கு  வாரிசு!!!

இதிகாசங்களை தோலுரித்து ஆரி யத்தின் அக்கிரமங்களை பொது வெளி யில்  அம்மணமாக்கிய அய்யாவின் அறிவுக் கைத்தடி !!

வடவரின் வஞ்சகத்தை வாய்மை யின் பக்கம் நின்று வலிமையோடு எதிர்த்த பெரியாரின் பேராயுதம்!!

திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்க திராவிட இனமே இன்றைக்கு தடம் பார்த்து காத்து நிற்கிறது.  தலைவருக்கும் தோழர்களுக்கும் இடையே இரண்டு ஆண்டுகள் கரோனா பெருந்தொற்று தடையாக இருந்த போதும் தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றும் ஆற்றல் படைத்த நம் தலைவர் காணொலி வாயிலாக தோழர்களை சந்தித்ததுடன்  தன் கடமையையையும் சரிவரச் செய்த ஆற்றலாளர்! இன் றைக்கு நம் குடும்பத் தலைவர்  மானமிகு ஆசிரியர் அவர்கள் நம்மை நேரடியாக சந்திக்க வருகிறார்!!

அய்யாவை வரவேற்க கழகக் கொடிகள் தயாராகட்டும்!!   வண்ண வண்ணப் பதாகைகள் வழிநெடுக வாசம் வீசட்டும்....  சுவரெங்கும் தோழர் களின் கைவண்ணத்தில் இயக்கத்தின் கொள்கைச்சுடர் ஒளிரட்டும்!!! தலை வரை வரவேற்க, வரவேற்பு வாசகங்கள் அணிவகுக்கட்டும் !!

எங்கள் திராவிடத்தின் திருஞான சம்பந்தரே வருக வருக !!

- பி.என்.எம். பெரியசாமி

ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்டத் தலைவர்,

.. மாவட்ட அமைப்பாளர்.

No comments:

Post a Comment