காத்மாண்டு, ஏப். 5- சீனாவிடம் அதிக வட்டிக்கு வாங்கிய கடன்களால் சிக்கிக் கொண்ட இலங்கை மற் றும் பாகிஸ்தான் நாடுக ளில் தற்போது அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள் ளது. இந்தநிலையில் பெருந்தொகையை கட னாக தர சீனா முன்வந்த நிலையில் அதனை ஏற்க நேபாளம் மறுத்துள்ளது. மாலத்தீவு, வங்கதேசமும் சீன கடன்களை பெற அச்சம் தெரிவித்துள்ளன.
இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட் டுள்ள நிலையை புரிந்து கொண்டுள்ள நேபாளம் அண்மையில் சீனா பெருந்தொகையை கட னாக தர முன் வந்தபோது அதனை வேண்டாம் என மறுத்து விட்டது.
மார்ச் மாத இறுதியில் சீன வெளியுறவு அமைச் சர் வாங் யியின் காத் மாண்டு வருகை தந்தார். இந்தியாவை தனிமைப் படுத்தி தெற்காசியாவில் பெல்ட்ரோடு திட் டத்தை செயல்படுத்தும் சீனா இதற்காக நேபாளத் துடன் பேச்சுவார்த்தை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment