சென்னை, ஏப். 4- தமிழ்நாடு பாலிமர் பூங்காவில், தொழிற்சாலைகள் துவங்க முன்வரும் நிறுவ னங்கள், நிலம் ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ‘சிப்காட்’ அதி காரிகள் கூறியதாவது:
‘டிட்கோ’ எனும், தமிழ் நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் சிப் காட் நிறுவனம் இணைந்து, திருவள்ளூர் மாவட்டம், வாயலூர் மற்றும் புழுதி வாக்கம் கிராமங்களில், 265 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு பாலிமர் தொழில் பூங்காவை, 216 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தி வருகிறது.
ஒன்றிய அரசின் ரசா யனம் மற்றும் பெட்ரோ லிய துறையின், ‘பிளாஸ் டிக் பூங்கா’ திட்டத்தின் கீழ், இந்த பூங்கா செயல் படுத்தப்பட்டு வருகிறது.முதல் கட்டமாக, 180 ஏக் கர் பரப்பளவில், பிளாஸ் டிக் தயாரிப்பு மற்றும் அது சார்ந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில் பிரிவு கள் அமைப்பதற்காக உரு வாக்கப்பட்டுள்ளது.பூங்காவிற்கான சாலை அமைத்தல், தண்ணீர் விநி யோகம் செய்வதற்கான கட்டமைப்புகளை உரு வாக்கும் பணிகள் உட் பட, உட்கட்டமைப்பு வச திகள் அமைக்கும் பணி கள் முழுமையாக முடிந்து விட்டன.
இந்நிலையில், இந்த பூங்காவில் தொழிற்சாலை கள் அமைக்க விரும்பும் நிறுவனங்கள், நிலங்கள் ஒதுக்கீடு பெற விண்ணப் பிக்கலாம். நிலம் பெற விரும்பும் நிறுவனங்கள், tnpolymerparkonline application.com என்ற இணையதளத்தில் விண் ணப்பிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment