30 நாட்கள் வேலிடிட்டி. - ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோனும் அறிவிப்பு - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 5, 2022

30 நாட்கள் வேலிடிட்டி. - ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோனும் அறிவிப்பு

12

மும்பை, ஏப். 5- இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்பு 30 நாட்கள் வேலிடிட்டி திட்டங்களை வழங்கி வந்தன. பின் திடீரென வேலிடிட்டி நாட்கள் 28-ஆக குறைக்கப்பட்டன.

இதனால் ஒருமாத வேலிடிட்டி என்பது 28 நாட்களாகவே இந்தியாவில் இருந்து வருகிறது. இதை தொடர்ந்து ஜியோ நிறுவனம் காலண்டர் மாத வேலிடிட்டி என 30 நாட்கள் வேலி டிட்டி தரும் ரீசார்ஜ் திட்டத்தை கடந்த வாரம் அறிவித்தது. இந்த திட்டத்திற்கு மக்களிடையே வரவேற்பு இருந்ததை தொடர்ந்து ஏர்டெல்லும் 30 நாட்கள் வேலிட்டிட்டி திட்டத்தை அறிவித்தது. 

இந்நிலையில் வோடஃபோனும் தற்போது 30 நாட்கள் வேலிட்டிடியை வழங்கும் இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின்படி ரூ.327க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ்கள், மொத்தமாக 25 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படும். 

இதேபோல ரூ.337-க்கு ரீசார்ஜ் செய் தால் தினம் 100 எஸ்.எஸ்கள், அன் லிமிட்டெட் அழைப்புகள் மற்றும் 28 ஜிபி டேட்டா 31 நாட்களுக்கு வழங்கப் படும். இத்துடன் விஅய் மூவிஸ் மற்றும் தொலைக்காட்சி செயலிக்கான சந்தா வும் இலவசம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment