பெய்ஜிங், ஏப். 5- முதன் முதலில் கரோனா வைரஸ் தொடங்கிய சீனா தற்போது மீண்டும் உருமாறிய கரோனோவால் சிக்கி தவிக்கிறது. கரோனாவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த அந்த நாட்டில் கரோனா பரவல் வேகமெடுத்து உள்ளதால் பொது மக்கள் அச்சத் தில் உறைந்து போய் உள்ளனர். இதை கட்டுப்படுத்த பல மாகாணங் களில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தபட்டு உள்ளது.
சீனாவின் மிகச்சிறந்த பொரு ளாதார நகரமாக திகழும் ஷாங் காய் நகரில் தினமும் கரோனோ வால் பாதிக்கப்படுபவர்களின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் நோய் தொற்று குறையவில்லை.
கடந்த மாதத்தில் 438 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட னர். மேலும் 7788 பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கரோனோ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று 13 ஆயிரத்து 146 பேருக்கு கரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்தது. அவர்கள் தனிமைப் படுத்தபட்டு சிசிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
ஷாங்காய் நகரில் உலக பொருளாதார கண்காட்சி மய்யம் உள்ளது. தற்போது இந்த மய்யம் தற்காலிக மருத்துவமனை மற்றும் தனிமைபடுத்தும் மய்யமாக மாற் றப்பட்டு உள்ளது. 6 ஆயிரம் படுக்கை வசதிகள் இங்கு ஏற்படுத்த பட்டு உள்ளது. 14 ஆயிரம் பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
மொத்தம் 2 கோடியே 60 லட்சம் மக்கள் தொகை கொண்டு ஷாங்காய் நகரில் கரோனா மேலும் பரவாமல் தடுக்க சீனா பல்வேறு நடவடிக்கைளில் இறங்கி உள்ளது.
ஷாங்காய் நகர பொது மக்கள் 2 தடவை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப் பட்டு உள்ளனர். மேலும் மருத்துவ பரிசோதனையும் அங்கு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ஷாங்காயில் 2.6 கோடி மக்கள் உள்ளதாகல் பரிசோதனை உத விக்காக ராணுவம் மற்றும் ஆயி ரக்கணக்கான மருத்துவர்களை அந்நகருக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment