பெங்களூரு, ஏப். 4-பொதுத் துறையை சேர்ந்த, எச்.ஏ. எல்., எனும், ‘ஹிந்துஸ் தான் ஏரோநாட்டிக்ஸ்’ நிறுவனம், அதன் சரித்தி ரத்தில் இதுவரை இல் லாத வகையில், கடந்த நிதியாண்டில், 24 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டி உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் வருவாயை விட, 6 சதவீதம் அதிகம் என்றும், இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்கு நரான ஆர்.மாதவன் கூறி யதாவது: கரோனா இரண் டாவது அலையினால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல்வேறு பிரிவுகள் மூடப்பட்டன. இதனால் ஏற்பட்ட உற் பத்தி இழப்புகள்,அடுத்து வந்த மாதங்களில் சரி செய்யப்பட்டது. ஜூன் மற்றும் ஜூலை மாதங் களில், ஊழியர்கள் கூடு தல் நேரம் பணியாற்றி, முந்தைய மாத இழப்புகள் சரிசெய்யப்பட்டது.இவ் வாறு அவர் கூறினார்.
கடந்த நிதியாண்டில், இந்நிறுவனம் 44 புதிய ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை யும்; 84 புதிய என்ஜின்க ளையும் தயாரித்துள்ளது. மேலும், இக்காலகட்டத் தில், 203 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் கள்; 478 என்ஜின்கள் ஆகியவை சீரமைக்கப் பட்டதாகவும் தெரிவித் துள்ளது.
No comments:
Post a Comment