ஆப்ரிக்க நாடுகளிலிருந்து அய்ரோப்பிய நாடுகளில் தஞ்சம்: மத்திய தரைக்கடல் வழியாக படகில் பயணம்: விபத்தில் 100 பேர் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 5, 2022

ஆப்ரிக்க நாடுகளிலிருந்து அய்ரோப்பிய நாடுகளில் தஞ்சம்: மத்திய தரைக்கடல் வழியாக படகில் பயணம்: விபத்தில் 100 பேர் பலி

ரோம், ஏப். 5- ஆப்ரிக்க நாடுகளில் இருந்து அய் ரோப்பிய நாடுகளுக்கு மத்திய தரைக்கடல் வழி யாக படகில் சென்ற போது நேரிட்ட விபத்தில் 100 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அல்ஜீரியா, லிபியா போன்ற வட ஆப்ரிக்கன் நாடுக ளில் வேலையில்லா திண் டாட்டம், வறுமை, சட் டம் - ஒழுங்கு சீர்கேடு போன்ற காரணங்களால் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின் றனர். அய்ரோப்பிய நாடு களில் தஞ்சம் அடைய அவர்கள் கள்ளத்தனமாக படகுகளில் பயணம் செய்வது தொடர்ந்து வரு கிறது. அவ்வாறு 100க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு மத்திய தரைக் கடல் வழியாக சென்ற படகு ஒன்று எஞ்சின் பழுது காரணமாக நடுக் கடலில் சிக்கிக் கொண்டது.

4 நாட்கள் நடுக்கட லில் சிக்கித் தவித்த அவர் கள், ஒரு கட்டத்தில் பீதி யில் தப்ப முயன்ற போது, கப்பல் கவிழ்ந்து 100க்கும் மேற்பட்ட மக்கள் கடல் நீரில் மூழ்கினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் ஒரு சிலரை மட்டும் மீட்டதாக கூறப்படுகிறது. உக்ரைனில் இருந்து வரும் அகதிகளை ஏற்றுக் கொள்ளும் அய்ரோப்பிய நாடுகள், தங்களை ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று உயிர் தப்பிய சிலர் வேதனையுடன் தெரிவித் தனர். ஆப்ரிக்கன் நாடுக ளில் இருந்து வருவோரை தடுக்க கடும் கண்காணிப்பு களை அய்ரோப்பிய நாடு கள் பின்பற்றி வருகின்றன. 


No comments:

Post a Comment