வாசிங்டன், ஏப். 6- இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படும் நிலையில், அதில் 1.3 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படுகிறது
இந்த சூழலில், உக்ரைன் மீதான தாக்குதலால் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் இதர மேற்கத்திய நாடுகள் பொருளா தாரத் தடைகள் விதித்துள்ளன. இதனால் இந்தியா மற்றும் பிற பெரிய இறக்குமதியாளர்களுக்கு கச்சா எண்ணெய் மற்றும் இதர சரக்குகளை சலுகை விலையில் வழங்க ரஷ்யா முன் வந்துள்ளது. அதனை ஏற்று, அந்நாட்டிடம் இருந்து இந் துஸ்தான் பெட்ரோலியம் மற் றும் இந்தியன் ஆயில் பொதுத் துறை நிறுவனங்கள் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளன.
உக்ரைன் மீது படையெ டுத்து கடுமையான தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் வாங்கும் இந்தியா மீது பன்னாட்டு அரங்கில் விமர்சனங்கள் எழுந் தன. இதனையடுத்து இந்தியா வின் சட்ட ரீதியான எரிசக்தி பரிவர்த்தனைகளை அரசிய லாக்கக் கூடாது என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித் திருந்தன.
இந்நிலையில் ரஷ்யாவிடம் 1 முதல் 2 சதவீதம் மட்டுமே எரிசக்தியை இந்தியா இறக்கு மதி செய்வதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பா ளர் ஜென் சாகி தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக செய்தி யாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “எரிசக்தி கொடுப்பனவு களில் சில அறிக்கைகளைப் பெறுவது அனுமதி அல்ல, அது ஒவ்வொரு நாடும் எடுக் கும் முடிவு. நாங்கள் முடிவெ டுத்தாலும், மற்ற நாடுகள் எரி சக்தி இறக்குமதியைத் தடை செய்ய முடிவு செய்தாலும், ஒவ்வொரு நாடும் தங்கள் சொந்தத் தேர்வுகளைச் செய் யப் போகிறது என்பதில் நாங் கள் தெளிவாக இருக்கிறோம்.
ரஷ்ய எரிசக்தி மற்றும் பிற பொருட்களின் இறக்குமதியை விரைவுபடுத்துவது அல்லது அதிகரிப்பது இந்தியாவின் நலன் என்று நாங்கள் நம்ப வில்லை. தற்போது, ரஷ்ய எரி சக்தியின் உடனடி இறக்குமதி, இந்தியாவின் மொத்த எரிசக்தி இறக்குமதியில் ஒன்று முதல் 2 சதவீதம் மட்டுமே” என்று ஜென் சாகி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment