டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வலியுறுத்தி, நாடா ளுமன்ற இரு அவைகளிலும் டி.ஆர்.எஸ். உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
டில்லியில் தலை நிமிரும் திராவிடக் கோட்டை; தேசிய அரசியலில் திமுகவின் பங்கை டில்லி அலுவலகம் குறிக்கிறது என அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா குறித்து திமுக தலைவர் கடிதம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் கொள்கை ரத்து செய்யப்பட்டால், 2007 முதல் 2020 வரை நான்கரை லட்சத்துக்கும் அதிக மான ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், அது பணியாளர்களின் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழகங்களும் பொது நுழைவுத் தேர்வு நடத்திட வேண்டும் என்ற ஒன்றிய கல்வித் துறையின் அறிக்கையை எதிர்த்து தமிழ்நாட்டில் ம.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு.
தி டெலிகிராப்:
உகாதி பண்டிகைக்கு ஒரு நாள் கழித்து அதிக அள வில் உண்ணப்படும் இறைச்சி உள்பட எந்த ஒரு ஹலால் பொருட்களையும் இந்துக்களை வாங்க வேண்டாம் என்று சங்பரிவார் அமைப்புகள் கருநாடகாவில் மற்றொரு வகுப்புவாத பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment