தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 31, 2022

தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கல்

வடசென்னை திராவிடர் கழகம், மங்களபுரம்  பகுதி தோழர் .பாஸ்கரின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வளர்ச்சி நிதியாக நன்கொடை

ரூ. 500/-யை வழங்கினார். அத்துடன் எழும்பூர் கண் மருத்துவ மனைக்கு விழிக்கொடை அளிப்பதாகவும் அதற்கான படிவம் மூலம் உறுதிமொழியை  வழங்கினார். உடன் அவரின் இணை யர் ரமணி. (சென்னை பெரியார் திடல், 29.03.2022).

 நன்கொடை

ஈரோடு "விடுதலை"நாளிதழ் வாசகர் வட்ட செயலாளர், ஓய்வுபெற்ற வணிகவரித்துறை அலுவலர் சி.கிருட்டினசாமி 27.03.2022 அன்று தனது 84ஆவதுபிறந்தநாள் மகிழ்வாக விடுதலை"ஓராண்டு சந்தாவாக ரூபாய் 2000மும், ஏப்ரல் 19 ஈரோடு வருகைதரும் ஆசிரியர் அவர்களின் வரவேற்புப் பொதுக்கூட்டத்திற்கு நன்கொடை முதல் தவணையாக ரூபாய் 3000மும் மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண்முகத்திடம் 29.03.2022 அன்று வழங்கினார். நன்றி.

- - - - -

திருவெறும்பூர் திராவிடர் கழக நகர செயலாளர் சிவானந்தத்தின் மகள் சி.ரா.யாழினியின் 17ஆவது பிறந்த நாள் (31.3.2022) மகிழ்வாக திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினார்.

 


No comments:

Post a Comment