கும்பகோணம் அருகே நடராஜன் சிலை பிடிபட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 31, 2022

கும்பகோணம் அருகே நடராஜன் சிலை பிடிபட்டது

கும்பகோணம், மார்ச் 31- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள டி.மாங்குடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு சொந்த மான சிலை பட்டறையில் பழமையான சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்ப தாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில், காவல்துறையினர் அடங்கிய தனிப்படையினர் நீதிமன்றத் தில் முன் அனுமதி பெற்று சதீஷ்குமாரின் சிலை பட்ட றையில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு 5 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட பழமையான நட ராஜர் உலோக சிலை மறைத்து வைக்கப்பட்டிருப்பது காவல்துறையினருக்கு தெரிய வந்தது. இந்த சிலைக்கான முறையான ஆவணங்கள் குறித்து சதீஷ்குமாரிடம் காவல்துறையினர் விசா ரணை செய்தனர். அப்போது அவரிடம் எந்தவித ஆவணங் களும் இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து நடராஜர் சிலையை காவல் துறையினர் மீட்டனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர், மீட்கப்பட்ட நடராஜர் உலோக சிலையை கும்ப கோணம் நீதிமன்றத்தில் ஒப் படைக்க உள்ளதாகவும், இந்த சிலை எந்த கோவிலுக்கு சொந்தமானது என்பது விசா ரணையின் முடிவில்தான் தெரிய வரும் எனவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment