கிவ், மார்ச் 1- உக்ரைன் மீது ரசியா 6ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரசிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ்- நகரையும் நெருங்கியுள்ள ரசிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரசிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், போரில் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் சிறையில் உள்ள போர் பயிற்சி பெற்ற குற்றவாளிகளை விடுதலை செய்ய உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது. ரசிய படைகளை எதிர்த்து போரிட இந்த குற்றவாளிகள் பயன்படுத்தப்பட உள்ளனர்.
நியாயப்படி இது சுலபமான முடிவில்லை என்றபோதும் பாதுகாப்பு நிலைப்பாட்டில் பார்க்கும்போது நகரம் தாக் குதலுக்கு உள்ளாவதால் அதை பாதுகாக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை நியாயமானது தான்’ என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment