தமிழர் தலைவருக்கு திருவாரூரில் எழுச்சிமிகு வரவேற்பு
திருவாரூர், மார்ச் 31- திருவாரூர் மாவட்ட கழக கலந்துரையா டல் கூட்டம் 29.3.2022 செவ் வாய்க்கிழமை காலை 10 மணி யளவில் திருவாரூர் மாவட்ட கழக கட்டிடத்தில் மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமையிலும் மண்டல செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராஜ் முன்னிலை யிலும் நடைபெற்றது. கூட்டத் தில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் கருத்துரை ஆற்றினார். கூட் டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
1. இரங்கல் தீர்மானம் மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இராயபுரம் இரா.கோபால், திருநெய்பேர் எழிலனார், சோழங்கநல்லூர் சீனிவாசன், தனசேகரன், வட வோடை நடேசன், மேல சூர னூர் முருகையன், அஞ்சம் மாள், முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், கோபால், நெடுங்காட்டாங்குடி தவமேரி ஆகியோரது மறை விற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத் தையும் தெரிவித்துக் கொள்கி றது.
2. 19.3.2022 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற் குழு கூட்ட தீர்மானங்கள் ஏற்று செயல்படுவது என முடிவு செய்யப்படுகிறது.
3. நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு ஆகிய முழக்கங்களை முன்னிறுத்தி நாகர்கோயில் இருந்து சென்னை வரை பரப்புரை பெரும் பய ணம் மேற்கொண்டு ஏப்ரல் 9 அன்று திருவாரூர் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் வரவேற்பு அளிப்பது எனவும் ஏப்ரல் 9 திருவாரூரில் பொதுக் கூட் டத்தை எழுச்சியுடன் நடத்து வது என முடிவு செய்யப்படு கிறது. பொதுக்கூட்டத்தை மக் கள் மத்தியில் விளம்பரப்படுத் தும் வகையில் சுவரெழுத்து, சுவரொட்டி, பதாகைகள், உள்ளூர் தொலைக்காட்சியில் விளம்பரம், நிதி வசூல், ஒலி பெருக்கி விளம்பரம் உள் ளிட்ட அனைத்தையும் கழக தோழர்கள் இணைந்து மிகச் சிறப்பாக செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
4. ஏப்ரல் மே மாதங்களில் ஒன்றிய மற்றும் கிளைக் கழ கங்களின் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி கழக அமைப்புகளை புதுப்பிப்பது, மாவட்டம் முழுவதும் பரவ லாக தெருமுனைக் கூட்டங் களை நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
5. தந்தை பெரியார் அவர் களின் சிந்தனைகள் அடங்கிய புத்தகங்களை உலக மக்கள் அறிந்திடும் வகையில் இந்திய, உலக மொழிகளில் மொழி பெயர்த்து பரப்பிட 5 கோடி நிதியை தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கி "பெரியார் உலகமயம் - உலகம் பெரியார் மய்யம்" என்ற சாத னையை படைத்துள்ள "சமூக நீதியின் சரித்திர நாயகர்" தமிழ் நாடு முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம் பாராட்டுகளையும் நன்றிகளை யும் தெரிவித்துக் கொள்கிறது.
6. திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளராக பி.சுவாமிநாதனும், திருவாரூர் நகர தலைவராக கோ.ராமலிங் கமும், நகர துணைத்தலைவராக சு.மனோகரனும், நகர செயலா ளராக ப.ஆறுமுகனும் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களது ஒப்புதலோடு இக்கூட்டத்தில் அறிவிக்கப்படுகின்றனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எஸ். எம்.கேஅருண் காந்தி, மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் க.வீரையன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.வி.சுரேஷ், நகர தலைவர் கோ.இராமலிங்கம், நகர செய லாளர் ப.ஆறுமுகம், திருவாரூர் ஒன்றிய தலைவர் இரா.ராஜேந் திரன், குடவாசல் ஒன்றிய செயலாளர் சி.அம்பேத்கர், ஒன்றிய அமைப்பாளர் ஜெ.கனகராஜ், நன்னிலம் ஒன்றிய தலைவர் சு.கரிகாலன், முன் னாள் மாவட்ட செயலாளர் மு.சரவணன், திருத்துறைப் பூண்டி ஒன்றிய தலைவர் சு.சித்தார்த்தன், அபிசேகமங்க லம் பாலகிருஷ்ணன், மாவட்ட ப.க தலைவர் அரங்க.ஈவேரா, மண்டல மாணவர் கழகச் செயலாளர் அஜெ.உமாநாத், திருவாரூர் ஒன்றிய செயலாளர் வ.சாம்பசிவம் மற்றும் பலர் உரையாற்றினர். கூட்டத்தில் வேளாண்மைத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கே.சிவராமன் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
நிகழ்வில் மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலைவர் அரங்க.ஈவேரா ரூ. 5000, நகர தலைவர் கோ.இராமலிங்கம் ரூ.1000, நகர செயலாளர் ப.ஆறு முகம் ரூபாய் 1000, கே.சிவ ராமன் ரூபாய் 1000, திருத்துறைப் பூண்டி நகர தலைவர் தி.குணசேகரன் ரூ 2000 நன்கொடை வழங்கி னர். நிறை வாக நகர செயலாளர் ப.ஆறுமுகம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment