முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் 69ஆம் ஆண்டு பிறந்த நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 1, 2022

முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் 69ஆம் ஆண்டு பிறந்த நாள்

தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்

தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளையொட்டி  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்  தோழர்களுக்கு கேக் மற்றும் லட்டுகளை வழங்கினார்.

சென்னை, மார்ச் 1 தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் 69ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (1.3.2022) தந்தை பெரியார் நினைவிடத் தில் அவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத் தினார். தமிழர் தலைவர் அவருக்கு பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.

திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் 69ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (1.3.2022) காலை 8 மணிக்கு சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்தார். அவரை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச. பிரின்சுஎன்னாரெசு பெரியார் ஆகியோர் வரவேற்றனர்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழர் தலைவருடன் இணைந்து தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், நேற்று (28.2.2022) சென்னையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல்காந்தி அவர்களால் வெளியிடப்பட்ட மு.க. ஸ்டாலின் அவர் களின் வாழ்க்கை வரலாற்று நூலின் முதல் தொகுதி "உங்களில் ஒருவன்" என்ற புத்தகத்தை தமிழர் தலைவருக்கு வழங்கினார்.

பின்னர் அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து தந்தை பெரியார் நினைவிட நுழைவு வாயில் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் திராவிட வரலாறு கல்வெட்டின் அருகே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கி, இயக்க நூல்களை அளித்து பிறந்த நாள் வாழ்த்து அறிக்கை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். பின்னர் முதலமைச்சர் தமிழர் தலைவரிடம் விடை பெற்றுச் சென்றார்.

இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச் சருமான துரைமுருகன், தி.மு.க. மக்களவைக் குழுத் தலைவர் டிஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், ஆ. ராசா, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, பொதுப் பணி துறை அமைச் சர் எ.வ. வேலு, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, மேனாள் ஒன்றிய இணை அமைச்சர் வேங்கடபதி, தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு கதர்துறை அமைச்சர் காந்தி, மேனாள் அமைச்சர் மதிவாணன், தி.மு.க. இளைஞரணி செய லாளர் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், திருபோரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ. பரந் தாமன், திரு.வி.க. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர் சனம், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந் திரன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் ரவிச்சந்திரன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், தி.மு.க. வட்டச் செயலாளர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. நிர்வாகிகள் ஏகப்பன், மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி சீறிதர், எழும்பூர் சுதாகர், நித்யராஜ், தேவநிதி, விஜயகுமார், சரண்குமார் மற்றும் திராவிடர் கழக வழக்குரைஞர்கள் சென்னியப்பன், சோ. சுரேஷ், சென்னை மண்டல செயலாளர் தே.செ. கோபால், வடசென்னை மாவட்ட தலைவர் வெ.மு.மோகன் மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 69ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி எழும்பூர் பகுதி  - 58ஆவது வட்ட தி.மு.க. செயலாளர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில் பிறந்த நாள் "கேக்"கை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் இனிப்புடன் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment