புதுடில்லி, மார்ச்31- கரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு பாலிடெக்னிக்குகளில் தலா 2 இடங்கள் ஒதுக்கீடு செய்ய ஏ.அய்.சி.டி.இ. அனுமதி அளித்துள்ளது.
கரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டத்தின்கீழ் வரும் கல்வியாண்டு முதல் (2022-23)பாலிடெக்னிக்குகளில் ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் தலா 2 இடங்கள் ஒதுக்கீடு செய்ய ஏ.அய்.சி.டி.இ. (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்) அனுமதி அளித்துள்ளது.
இதனால் மற்ற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும், மொத்த இடங்களில் பாடப்பிரிவுக்கு தலா 2 இடங்கள் என கூடுதல் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்கிடெக் படிப்பு
இதுதவிர ஆர்கிடெக் படிப்பில் சேர பிளஸ்-2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களை படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment