திருப்பூர், மார்ச் 31- திருப்பூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் திருப்பூர் பெரியார் புத்தக நிலையத்தில் 28.3.2022 திங்கள் நண்பகல் 12 மணியளவில் மாவட்ட தலை வர் ஆறுமுகம் தலைமையில், மாவட்ட செயலாளர் யாழ் ஆறுச்சாமி முன்னிலையில் நடைபெற்றது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும்பயண நோக்கத்தைப் பற்றி பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தொடக்கவுரை யாற்றினார். மாவட்ட அமைப் பாளர் சிவசாமி, இளைஞர் அணி கருணாகரன், குணசேக ரன், திராவிடன் பன்னீர் செல் வம், துரைமுருகன், குரு விஜய காந்த், அன்பழகன், செல்வராசு, புத்தக நிலைய மைனர், தஞ்சை டேவிட் ஆகியோர் கருத்துரை யாற்றினார்கள்.
தீர்மானங்கள்
1) கோவை மாவட்டம்கழக தலைவர் சந்திரசேகரனின் தந்தை மருதாசலம் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டது.
2) 19.3.2022அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமை செயற்குழு தீர்மானங் களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
3) நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு ஆகிய முழக்கத்தை முன்னிறுத்தி ஏப்ரல் 3 நாகர்கோவிலில் தொடங்கி ஏப்25 சென்னை வரை பரப்புரை பெரும் பய ணம் மேற்கொண்டு ஏப்18 அன்று திருப்பூர் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் வரவேற்பு அளிப்பது எனவும் ஏப்18 திருப் பூரில் பொதுக் கூட்டத்தை எழுச்சியுடன் நடத்துவது என வும் முடிவு செய்யப்பட்டது.
4) ஏப்ரல்,மே மாதங்களில் ஒன்றிய மற்றும் கிளைக் கழகங் களில் கலந்துரையாடல் நடத்தி கழக அமைப்பை புதுப்பிப்பது, மாவட்ட முழுவதும் தெரு முனைக் கூட்டங்களை நடத்து வது, ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் பெரியாரியல் பயிற்சி வகுப்புகளை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
5) தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் அடங்கிய புத்தகங்கள் உலக மக்கள் அறிந்திடும் வகையில் இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து பரப்பிட 5கோடி நிதியை தமிழ் நாடு அரசு நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கி "பெரியார் உலகமயம், உலகம் பெரியார் மயம்" என்ற சாத னையை படைத்துள்ள"சமூக நீதியின் சரித்திர நாயகர் "தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்களுக்கு திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பாராட்டுதல்களையும், நன்றியையும் இக்கூட்டத்தின் மூலம் தெரிவித்துக் கொள் கிறது.
No comments:
Post a Comment