நாடாளுமன்றச் செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 9, 2022

நாடாளுமன்றச் செய்திகள்

ஜாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கணக்கெடுப்பு

 சமாஜ்வாதி கட்சி மாநிலங்களவை உறுப்பினர்

சவுதாரி சுக்ராம் சிங் ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தல்

புதுடில்லி, பிப்.9- இந்திய ராணுவத்தில் ஜாதி அடிப்படையிலான அனைத்து படைப் பிரிவுகளையும் ஒழிக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி எம்.பி. சவுதாரி சுக்ராம் சிங் வலி யுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் அவர் உரையில் குறிப்பிட்டதாவது: ஜாதி அடிப்படையிலான அனைத்துப் படைப்பிரிவுகளையும் ஒழித்துக் கட்ட வேண்டும். ஜாதி அடிப் படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை, குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கெடுப்பை அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சவுதாரி சுக்ராம் சிங் யாதவ் பேசியுள்ளார்.

 

நிதிநிலை அறிக்கை விவாதத்தில் பங்கேற்காத நிதி அமைச்சர்

மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் கண்டனம்

புதுடில்லி, பிப். 9 நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது நாடாளுமன்றத்துக்கு வராத நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தி.மு.. மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்போது நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது.  இந்த முக்கியமான நேரத்தில் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் அவைக்கு வரவில்லை.  மாறாக அவர் இந்தியா டுடே பத்திரிகை நடத்திய நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.  இது எதிர்க்கட்சியினருக்கு கடும் அதிருப் தியை அளித்துள்ளது.

இது குறித்து தி.மு.. உறுப்பினரும் மேனாள் அமைச்சரு மான தயாநிதி மாறன் மக்களவையில் உரையாற்றுகையில்

நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடக்கும்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இல்லை  என்பது நாடாளுமன்ற  உறுப்பினர்களை அவமதிக்கும் செயலாகும்.  அப்போது  மக்களவையில் இருக்க வேண்டிய நிதியமைச்சர், அதற்கு பதிலாக இந்தியா டூடே நடத்தும் நிகழ்வில் பங்கேற்று இருக்கிறார்.

அவர் நியமன உறுப்பினராக இருப்பதே இதற்கு முக்கிய காரணம், ஆகும், அதனால் தான் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய மக்களவைக்கு மதிப்பு தரவில்லை.  மேலும் நிதி அமைச்சர் தன் உரையின்போது வரி செலுத்தும் மக்களுக்கு நன்றி கூறினார். அதற்கு  நான் வரிச்செலுத்துபவர்களுக்கு எந்த வரி மாற்றத்தையும் செய்ய மாட்டேன் என்பதே அர்த்தம் ஆகும் .

அதாவது அவர் கரோனா காலத்திலும் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆனால் நீங்கள் வரியை மட்டும் செலுத்துங்கள் எனத் தெரிவித்துள்ளார்.  நடுத்தர மக்களுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகள் மிக மோசமானதாக இருந்தது..  இந்த அரசால் அவர்களுக்கு எந்தப் பலனுமே கிடைக்கவில்லை.  அரசு தரப்பினர் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே வழங்கினார்கள்இவ்வாறு கூறினார்.

10 ரூபாய் நாணயம் செல்லும்

ஒன்றிய அரசு அறிவிப்பு

மும்பை, பிப்.09 ஒப்பந்தப்புள்ளி உள்ளிட்ட அனைத்து பரிவர்த்தனைக்கும் 10 ரூபாய் நாணயத்தை பயன்படுத்தலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் பல பகுதிகளில் 10 ரூபாய் நாணயம் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.   இவை போலியானவை என்னும் கருத்து பரவலாக உள்ளது.  இது குறித்து மாநிலங்களவையில்இவ்வாறு ரூ.10 நாணயங்கள் ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கப்படுகின்றன?  இது போல ஏற்றுக் கொள்ளாதது குறித்து வழக்குகள் பதியப்பட்டுள்ளனவா?” என ஒரு உறுப்பினர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த கேள்விக்கு நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி :ளித்த பதிலில், “ரூ.10 நாணயம் இந்திய அரசாங்கத் தால் அங்கீகரிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்டு மக்களுடைய பழக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே நாட்டில் சட்ட பூர்வமாக நடைபெறக்கூடிய ஒப்பந்தப்புள்ளிகள் மற்றும் சட்டபூர்வ பரிவர்த்தனைக்கு பத்து ரூபாய் நாணயங்களைப் பயன்படுத்தலாம்.  அவ்வப்போது 10 ரூபாய் நாணயங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆகவே மக்களிடம் உள்ள அச்சத்தைப் போக்குவதற்கும் தவறான எண்ணங்களை போக்கவும் மக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த அடிக்கடி ரிசர்வ் வங்கி விழிப்புணர்வு செய்திகளையும் விளம்பரங்களையும் வெளியிட்டு வருகிறது.  எனவே நாட்டு மக்கள் அனைவரும் 10 ரூபாய் நாணயத்தை எவ்வித தயக்கமுமின்றி உபயோகிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் குறைந்து வருகிறது

தாய் - சேய் இறப்பு விகிதம்:

ஒன்றிய அரசு தகவல்

புதுடில்லி,பிப்.9- தமிழ்நாட்டில் தாய் - சேய் இறப்பு விகிதம் குறைந்து வருவதாக ஒன்றிய அரசு புள்ளிவிவரத்துடன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி ஒன்று ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் எழுத்துபூர்வமாக அளித்த பதில் வருமாறு,

இந்திய தலைமை பதிவாளரின் மாதிரி பதிவு அமைப்பு அறிக்கையின்படி, குழந்தை இறப்பு விகிதம் 2015-ல் 1000 பிறப்புகளுக்கு 37லிருந்து 2019இல் தேசிய அளவில் 1,000 பிறப்புகளுக்கு 30 ஆகக் குறைந்துள்ளது. இதில், தாய்மார்கள் இறப்பு விகிதம் 2015-2017இல் 8.1 லிருந்து 2016-2018இல் தேசிய அளவில் 7.3 ஆகக் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2015இல் 19 ஆக இருந்த 1000 பிறப்புகளுக்கான இறப்பு விகிதம், 2016இல் 17 ஆகவும், 2017இல் 16 ஆகவும், 2018இல் 15 ஆகவும், 2019இல் 15 ஆகவும் இருந்தது. தமிழ்நாட்டில் 2015-2017இல் 4.8 ஆக இருந்த தாய்மார்கள் இறப்பு விகிதம், 2016-2018இல் 3.2 ஆக இருந்தது.

தாய் சேய் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

-இவ்வாறு ஒன்றிய இணை அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment