தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் இல்ல மணவிழா அழைப்பிதழை நேற்று (27.2.2022) மாலை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவரைச் சந்தித்தார். காங்கிரஸ் மாவட்டத் தலைவரும், சென்னை மாநகராட்சி 63ஆம் வட்ட உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான வழக்குரைஞர் சிவராஜசேகர் தமிழர் தலைவரிடம் வாழ்த்துப் பெற்றார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், எழுதி, புதிய வெளியீடாக வெளிவந்துள்ள 'தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?" புத்தகத்தை ஈ.வெ.கி.ச. இளங்கோவனிடம் தமிழர் தலைவர் அளித்தார்.
சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 58ஆவது வட்ட - ராஜேஸ்வரி, 78ஆவது வட்ட - சொ.வேலு, 61ஆவது வட்ட - பாத்திமா முசாபர் ஆகியோர் தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்களுடன் பெரியார் திடலுக்கு வந்து தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர். தமிழ்நாடு அமைச்சர் பி.கே. சேகர்பாபு தமிழர் தலைவரை சந்தித்து உரையாடினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், எழும்பூர் பகுதி சுதாகர் ஆகியோர் இருந்தனர். (சென்னை - 28.2.2022)
No comments:
Post a Comment