பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 1, 2022

பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை, பிப்.1 அரசு அறிவித்தபடி அனைத்து வகை பள்ளி களும் இன்று (1.2.2022) திறக்கப்படு வதை அடுத்து, பள்ளிகளில் கடைப் பிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை சுகா தாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அரசு அறிவிப்பின்படி அனைத்து வகை பள்ளிகளும் இன்று திறக்கப் படுவதை முன் னிட்டு, வழிகாட்டு நெறிமுறை களை பொதுசுகாதாரம் மற்றும் வருமுன் காக்கும் மருத்துவ இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 

* மாணவர்கள், பள்ளி ஆசி ரியர்கள், பணியாளர்கள், கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்கள் முகக் கவசம் அணிந்து வர வேண் டும்.

* ஒவ்வொரு வகுப்புக்கும் இடையே கைகளை தூய்மை செய்யும் கிருமி நாசினி வைக்க வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் தொற்று பரவாமல் இருக்க 1% ஹைப்போ குளோரைட் திரவம் தினமும் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

* பணியாளர்கள் 2 முறை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். 15- - 18 வயது நிரம்பிய மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் வரவேற்பு அறை பகுதியில் வெவ்வேறு இடங் களில் சமூக இடைவெளிக்காக வட்டங்கள் வரைவதுடன், குடி நீருக்கான இடங்கள், கை கழுவு வதற்கான இடங்கள், போன்ற வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

*  கூட்டத்தை தவிர்க்கும் வகையில் போக வர தனித் தனி வழிகள் ஏற்படுத்த வேண்டும்.

* கரோனா தொற்று தடுப்பு பகுதியில் வசிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கோ மற்ற கல்வி நிறுவனங்களுக்கோ செல்ல வேண்டாம். கரோனா தடுப்பு பகுதிக்கு செல்ல வேண்டாம்.

* மாணவர்கள் குழுவாக அமர்ந்து சாப்பிட அனுமதிக்கக் கூடாது.

* மாணவர்கள், பணியாளர் களுக்கு உணவு வேளைக்கும் முன்னதாக  காய்ச்சல் பரிசோதனை நடத்த வேண்டும். அறிகுறி தென் பட்டால், சோதனை முடிவு வரும் வரை மாணவர்களை தனிமைப் படுத்த வேண்டும். உறுதியானால் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.

* பள்ளி மாணவர்களுக்கு ஏதாவது அறிகுறிகள் தென்பட் டால் அவர்கள் பள்ளிக்கு வருவதை தடுத்து, சிகிச்சை பெற வைக்க வேண்டும்.

* கர்ப்பிணிப் பெண்கள், வயதா னவர்கள், சிகிச்சை பெற்று வரும் பணியாளர்கள் கூடுதல் முன்னெச் சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment