பள்ளி செல்லும் வயதில் பெண் குழந்தைகளைச் சாமியாட வைக்கும் வன்முறை நடப்பதா? உடனடியாகத் தடுக்கப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கி, இன்று தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வரை தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளால் தலைநகர் சென்னை முதல் குக்கிராமங்கள் வரை கல்வி நீரோடை பாய்ந்து பரவி வருகிறது. அதன்மூலம் காலங்காலமாக அடிமைத்தனத்திலும், மூடநம்பிக்கைகளிலும் அமிழ்ந்து கிடந்த மக்கள், குறிப்பாக கிராமப்புறப் பெண்கள் கல்வி கற்று, இப்போதுதான் அரசுப் பணிகள், அதிகாரப் பொறுப்புகள், அறிவியல் துறை என வளரத் தொடங்கி யுள்ளனர். இன்னும் நாம் செல்ல வேண்டிய தொலைவு நீண்டது.
ஆனால், முன்னேறிச் செல்லும் சமூகத்தை பின் னோக்கி படுபாதாளத்துக்கு இழுக்கும் செயல்கள் மதத் தின் பெயராலும், சடங்கு, சம்பிரதாயங்கள், மூட நம் பிக்கைகளின் பெயராலும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ். - சங் பரிவார் கும்பல் தொடர்ந்து பெண்களை மூடத்தனத்திலேயே வைத்தி ருப்பதற்கும், மதத்தின் பிடியிலிருந்து மீளாமல் தளையி டவும் பல்வேறு பெயர்களில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் இதற் கெதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்,
கவலையளிக்கும் காணொலி
இந்தச் சூழலில் அண்மையில் நாம் கண்ட காணொலி ஒன்று, கிராமப்புறங்களில் பெருகிவரும் கொடுமை ஒன்றினைக் குறித்த கவலையைத் தந்துள்ளது. பள்ளி செல்லும் - செல்லவேண்டிய சிறுமிகளைத் தலைவிரி கோலமாக வரிசையாக நிறுத்தி கையில் வேப்பிலையைக் கொடுத்து, பம்பை, உடுக்கையடித்து அவர்களுக்கு ’சாமி வரவைக்கும்’ நிகழ்ச்சிகள் வடமாவட்டங்கள் சிலவற்றில் நடைபெற்றுவருவதையும், அப்படி தொழில்ரீதியாக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அழைப்பதற்கான தொலைப் பேசி எண்ணுடனும் அந்தக் காணொலிக் காட்சிகள் காட்டுகின்றன.
வெறியூட்டும் வகையில் பம்பை, உடுக்கையடித்து சின்னஞ்சிறுமிகளை ஆடச் செய்து, அதனை ஆத்தா வந்து அருளும் நிலையாகக் காட்டி, ஆடு, கோழி பலிகேட்கும் காட்சிகளாகவும் நடத்துகிறார்கள். இவர்கள் அத்தனை பேரும் சமூகநீதியால் இப்போதுதான் பலன் பெற்றுவரும் கிராமப்புற, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த குழந்தைகள். அவர்கள் மீது இத்தகைய வன்முறை நிகழ்த்தப்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
மூடத்தனத்தில் ஆழ்த்துவதா?
அறிவியலால் உலகம் முன்னேறிக் கொண்டிருக்கும் சூழலில், அறிவியல் துறையிலேயே பெண்கள் ஏராள மாகப் படித்துச் சாதனை செய்து கொண்டிருக்கும் நிலையில், அப்படி முன்னேற வேண்டிய இளம் பிஞ்சு களின் மனநிலையைக் கெடுத்து, மூடத்தனத்தில் ஆழ்த்தி, அவர்களைக் கொண்டு பிழைப்பு நடத்தும் இத்தகைய கொடுமை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
சாமியார்களாலும், பூசாரிகளாலும், கார்ப்பரேட் ஆசி ரமவாசிகளாலும் நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமை களுக்கும், நரபலி உள்ளிட்ட கொலைபாதகங்களுக்கும் ஆளாகி மடியும் நிலை கண் முன்னே நடந்து கொண் டிருக்கும்போது, இவை பற்றி விழிப்படையாத மக்களி டையே மீண்டும் மீண்டும் இத்தகைய மூடநம்பிக்கைகள் விதைக்கப்படுவதும், திணிக்கப்படுவதும் பேராபத்தாகும். இப்படிப்பட்ட சாமியாடிகளும், பூசாரிகளும்தானே நரபலிக்குக் காரணமானவர்களாக இருக்கிறார்கள். அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்லும் முன் தடுப்பது முன்னெச்சரிக்கையல்லவா? அக்குழந்தைகளின் எதிர் கால வாழ்வை நாசமாக்கும் வகையில் உளவியல் ரீதியாகப் பெரும்பாதிப்பு ஏற்படுகிறது. அக்குழந்தை களுக்கு உளவியல் நிபுணர்களைக் கொண்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட வில்லையா?
உடனடி நடவடிக்கை தேவை
பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் இத்தகைய வன்முறை உடனடியாக சட்டரீதியாகத் தடுக்கப்பட்டு, காவல்துறையின் உரிய நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். மகளிர் ஆணையம் தலையிட்டு, இத்தகைய வன்முறைகள் நிகழாவண்ணம் தடுக்க ஆவன செய்ய வேண்டியது அவசர, அவசியமாகும்.
இத்தகைய மோசடிகள், வன்முறைகள், மூடநடம் பிக்கைகளின் பெயரால் அரங்கேற்றப்படுவதைத் தடுக்க, மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தமிழ்நாட்டிலும் நிறை வேற்றப்படுவதும் காலத்தின் தேவையும், கட்டாயமு மாகும்.
இப்போதே 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள்மீது நடக்கும் இத்தகைய வன்முறைகள் நடப்பதைத் தடுக்க போக்சோ போன்ற சட்டங்கள் இருப்பதையும் அரசு கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
கி.வீரமணி
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment