ஓமலூர் காடையாம்பட்டி முன்னாள் சேர்மன் மறைந்த சின்னராஜ் அவர்கள் நமது இயக்கத்தின் மீது மிகுந்த பற்று உடையவர். சென்ற ஆண்டு அவர் மறைவுக்கு சில நாட்கள் ஆறுதல் கூற நான் சென்றிருந்தேன் அப்போது அவர் மகன் அறிவழகன் நீங்கள் எப்போதும் எந்த உதவி வேண்டும் என்றாலும் உரிமையுடன் கேளுங்கள் என்று கூறினார்.
நேற்று விடுதலை சந்தா வேண்டி எப்போது உங்களை சந்திக்க வரட்டும் என்று கேட்டதற்கு சிறிதும் தாமதிக்காமல் உங்களுக்கு ஏன் வீன் சிரமம் என்று கூறி எனது கூகுள் பே நெம்பர் கேட்டு விட்டு போனை வைத்து விட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் ஆண்டு சந்தா 1800/- வும், அவரது முகவரியும் எனது செல்பேசிக்கு அனுப்பி வைத்தது எனக்கு ஊக்கத்தை தருவதாக அமைந்திருந்தது.
அவர் கழகத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் பழநி. புள்ளையண்ணன், சிந்தாமணியூர் சுப்பிரமணியன் அவர்களை மட்டுமே நன்கு அறிந்தவர்.நான் அவரை சந்தித்து அறிமுகம் இல்லாத நிலையில் திராவிடர் கழகத் தொண்டன் என்ற தகுதி என்னைப் பெருமை படுத்திய நிகழ்வாக அது அமைந்திருந்தது.
என்றும் நன்றியுடனும், உண்மையுடனும்
ஓமலூர் பெ.சவுந்திரராசன், திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment