தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்வு
வல்லம், டிச.31 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தந்தை பெரியாரின் 48ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசின் தலைமைக் கொறடா கோவி.செழியன் கலந்து கொண்டு உரையாற்றும்போது.
பெரியார் தனிமனிதரல்ல - ஒரு சகாப்தம் என்றார் அண்ணா . ஜாதி வெறியும், மதவெறியும் தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் பெரியார்.
இந்திய அரசமைப்புச்சட்டத்தின் முதல் திருத்தம் நடைபெறுவதற்கு காரணமாக இருந்தவரும் பெரியார். பெரியார் மறைந்தபோது முதலமைச்சர் கலைஞர் கூறினார். பெரியார் தம் சுற்றுப் பயணத்தை நிறுத்திக் கொண்டார்; நாம் தொடர்வோம்' என்றார்.
1989-ஆம் ஆண்டு கலைஞர் தமிழ்நாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை' சட்டத்தைக் கொண்டு வந்தார் என்றால் அது 1929-ஆம் ஆண்டு பெரியார் செங்கற்பட்டில் நடத்திய சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானம் ஆகும்.
கலைஞர் கொண்டு வந்த சமத்துவபுரம் என்பது பெரியாரின் கனவாகும்.
பெரியார் கல்வியை வலியுறுத்தினார். கல்விதான் சமூக மாற்றத்தைத் கொண்டு வரும் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில வேண்டும்.
உயர்நீதிமன்ற நீதிபதியாக தாழ்த்தப்பட்டவர்கள் வரவேண்டும் என்று பெரியார் விரும்பினார். வரதராஜன் உயர்நீமன்ற நீதிபதியாக, உச்சநீதி மன்ற நீதிபதியாக, வருவதற்குக் கலைஞர் காரணமாக இருந்தார் என்று பல செய்திகளை சுவைபடப் பேசினார்.
விழாவிற்குத் துணைவேந்தர்
செ. வேலுசாமி தலைமை வகித்தார். பதிவாளர் சிறீவித்யா அவர்கள் முன்னிலை வகித்தார். மூன்றாமாண்டு - விண்வெளி பொறியியல் துறை மாணவி அபிராமி வரவேற்புரை நிகழ்த்தினார்.
மூன்றாமாண்டு - விண்வெளி பொறியியல் துறை மாணவி இளவரசி நன்றியுரை கூறினார். நான்காமாண்டு - கல்வியியல் துறை மாணவி தஸ்லிமா இணைப்புரை வழங்கினார். மாணவர் அமைப்பு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தி
ருந்தது.
விண்வெளி பொறியியல்துறை துறைத்தலைவர் பேராசிரியர் கார்த்திக் சுப்ரமணியன் உட்பட பலரும் விழாவில் கலந்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment