புதுக்கோட்டை, டிச. 31- புதுக்கோட்டை மாவட்டம், மனமேல்குடி ஒன்றி யம், ஜெகதாபட்டிணத்தில் திரா விடர் கழக இளைஞரணி சார்பாக தந்தை பெரியார் 48ஆவது நினைவு நாள் 24.12.2021 வெள்ளி அன்று கடைபிடிக்கப்பட்டது. திராவிடர் கழக மன்டல தலைவர் ராவணன். தலைமையேற்றார். மாவட்ட தலைவர் மாரிமுத்து, மண்டல இளைஞரணி செயலாளர் வீரையா ஆகியோர் முன்னிலையேற்றனர்.
மனமேல்குடி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சீனி யார், சிபிஎம் ஒன்றிய செயலாளர் கரு.இராமநாதன், சமாஜ்வாதி கட்சி சரவணமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி ரவி (எ) கதிர் வளவன், கழக இளை ஞர் அணி தோழர்கள் லாவண்யா, சத்தியா, கார்த்தி, சிவபாலன், பாலா, குமார் மற்றும் அனைத்து கட்சி தோழர் கள், பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டு தந்தை பெரியார் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்கள் இளைஞர்களுக்கு தந்தை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையா னாள் புத்தகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை 2019 ஆம் ஆண்டு 25 நாட்கள் 25 மாணவர்கள் பெரியா ரியல் பயிற்சி மாணவர் குமார் ஏற் பாடு செய்து நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்திருந்தார்.
No comments:
Post a Comment