குடிமங்கலம், நவ.1 தமிழ்நாடு அரசு உப்பாறு ஓடையின் குறுக்கே 25 இடங்களில் தடுப்பணை கட்ட ரூ.6 கோடியே 25 லட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
குடிமங்கலம் ஒன்றியம் அனிக் கடவு, விருகல்பட்டி, வீதம்பட்டி, வாகத்தொழுவு, ஆமந்தகடவு, பெரிய பட்டி ஊராட்சிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைவால் பல்வேறு பிரச்சி னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் நிலத்தடி நீர் உவர்ப் பாகவும், வேதித்தன்மை மிகுந்ததாகவும் இருப்பதால் நிலத்தடி நீரை மேம்படுத்த அரசு உதவ வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர்.
குறிப்பாக அப்பகுதியில் உள்ள ஒரே நீரா தாரமான உப்பாறு ஓடையில் மழைக்காலங் களில் வீணாகச்செல்லும் தண்ணீரை தடுப்பணைகள் கட்டி தேக்கி வைத்து நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்த வேண்டும் என தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து தமிழ்நாடு அரசு உப்பாறு ஓடையின் குறுக்கே 25 இடங் களில் தடுப்பணை கட்டரூ. 6 கோடியே 25 லட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விழா விவசாயிகள் சார்பில் அனிக்கடவு கிராமத்தில் நடந்தது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமை வகித்தார். குடிமங் கலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செய லாளர் கிரி வரவேற்றார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் பேசினர்.
அப்பகுதி விவசாயிகள் சார்பில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக அனிக்கடவு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.
தமிழ்நாட்டில் 1901 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது
சென்னை, நவ.1 வடகிழக்கு பருவ மழை தீவிரம் காரணமாக தமிழ்நாட் டில் 1901 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும் நீர்வளத்துறை கட்டுபாட் டில் உள்ள 14,138 ஏரிகளில் 1901 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
இதில், அரியலூர் மாவட்டத்தில் 4 ஏரிகளும், செங்கல்பட்டில் 22ம், கோவையில் 9ம், கடலூரில் 21ம், திண்டுக்கல்லில் 26ம், ஈரோட்டில் 3ம், காஞ்சிபுரத்தில் 91ம், கள்ளக்குறிச்சியில் 41ம், கன்னியாகுமரியில் 280ம், கிருஷ்ணகிரியில் 35ம், மதுரையில் 445ம், நாமக்கல்லில் 16ம், பெரம்பலூரில் 1ம், புதுக்கோட்டையில் 24ம், ராணிப் பேட்டையில் 139ம், சேலத்தில் 20ம், சிவகங்கையில் 37ம், தென்காசியில் 215 என 52 ஏரிகளும் முழுகொள்ளளவை எட்டியுள்ளது. இதை தவிர்த்து 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை 2283 ஏரிகளும், 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை 1767ஏரிகளும், 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை 2785 ஏரிகளும், 1 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை 4571 ஏரிகளும், 831 ஏரிகளில் ஒரு சொட்டு கூட நீர் இல்லை. நேற்றுமுன் தினம் (31.10.2021) 1771 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டிய நிலை யில் நேற்று (31.10.2021) ஒரே நாளில் மட்டும் 130 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 147 ஏரிகள் நிரம்பின
28 ஏரிகளை கொண்ட சென்னை மாவட்டத்தில் 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை 7 ஏரிகளும், செங்கல் பட்டில் 34ம், காஞ்சிபுரத்தில் 111ம், திருவள்ளூரில் 15ம், 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை சென்னையில் 10 ஏரிகளும், செங்கல்பட்டில் 58ம், காஞ்சிபுரத்தில் 65ம், திருவள்ளூரில் 49ம், 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை சென்னையில் 8ம், செங்கல்பட்டில் 154ம், காஞ்சிபுரத்தில் 51ம், திருவள்ளூரில் 102ம், 1 சதவீதம் 25 சதவீதம் வரை சென்னையில் 2ம், செங்கல்பட்டில் 296ம், காஞ்சிபரத்தில் 75ம், திருவள்ளூரில் 354 ஏரிகளும் நிரம்பியுள்ளன. சென்னையில் 1, திருவள்ளூரில் 20 ஏரிகளில் ஒரு சொட்டு கூட நீர் இருப்பு இல்லை. அதே நேரத்தில் செங்கல்பட்டில் 22ம், திருவள்ளூரில் 34ம், காஞ்சிபுரத்தில் 91 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டி யதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment