வரலாற்று ஆவணங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் மோடி அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 17, 2021

வரலாற்று ஆவணங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் மோடி அரசு

புதுதில்லி, அக்.17- லாபம் தரும் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தள்ளுபடி விலையில் விற்று வரும் மோடி அரசு, அடுத்து ஒன்றை விற்க முடிவு செய்துள்ளது. நாட்டின்

பெருமதிப்பு மிக்க நூறு ஆண்டுகால  வர லாற்று ஆவணங்களை  தனியார் தொலைக் காட்சி களுக்கு  விற்க முடிவு செய் துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சுதந்திர போராட்டங்கள், குடிய ரசுக்கு முந்தைய நாடாளுமன்ற விவாதங்கள் உள்ளிட்ட நாட்டின் மிக முக்கிய ஆவணங் களை ஏலம் விட்டு வருவாய் ஈட்ட ஒன்றிய அரசு திட்டமிட்டு அறிவிப்பு வெளியிட் டுள்ளது. இதன் மூலம் அரசு தொலைக்காட்சி மற்றும் அகில இந்திய வானொலியின் முக்கிய ஆவணங்களை தனியாருக்கு விற்பனை செய்து வருவாய் ஈட்ட முடியும் என்று பிரச் சார் பாரதியின் தலைவர் சசிசேகர் கூறி யுள்ளார்.

சுதந்திரத்துக்கு முன்பு தொடங்கி இந்தி யாவின் 100 ஆண்டுகால முக்கிய வரலாற்று காட்சி மற்றும் ஒலி வடிவிலான பல்லாயி ரம் ஆவணங்கள் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியிடம் பாதுகாப்பாக உள்ளன.   காந்தி, நேரு, இந்திராகாந்தி உள் ளிட்ட பல முக்கிய தலைவர்களின் வாழ்க் கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள், 1946 முதலான முக்கிய நாடாளுமன்ற நிகழ்வுகள் என்று பல முக்கிய ஆவணங்கள் பிரச்சார் பாரதியின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்திய அரசின் கைவசமுள்ள மிக அரிதான இந்த ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு ஆவணங்களை இரண்டாகப் பிரித்து ஏலத்தில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வகுக்கப்பட்ட கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதனை அறிவிப்பாணையாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. பல முன்னணி தொலைக் காட்சி நிறுவனங்கள், .டி.டி நிறுவனங்கள் இவற்றை வாங்க விருப்பம் தெரிவித்துள்ள தாக பிரச்சார் பாரதியின் தலைவர் சசிசேகர் தெரிவித்துள்ளார்.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விசுவாச மாக செயலாற்றி வரும் மோடி அரசின் இந்நட வடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment