பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 11, 2021

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு

m18

மாஸ்கோ, செப். 11- பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்துபிரிக்ஸ்' கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் 13-ஆவது உச்சி மாநாடு காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. 2012 மற்றும் 2016-ஆம் ஆண் டுக்கு பிறகு 3-ஆவது முறை யாக இந்த ஆண்டின் உச்சி மாநாட்டை இந் தியா தலைமை தாங்கி நடத்தியது.

பிரிக்ஸ்' உச்சி மாநாட் டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவது இது 2-ஆவது முறை யாகும். முன்னதாக 2016-ஆம் ஆண்டு கோவாவில் நடந்த மாநாட்டுக்கு அவர் தலைமை தாங் கினார். 

இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின் பிங், பிரேசில் அதிபர் ஜெயிர்போல்சொ னாரோ, தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு, ‘தொடர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமித்த கருத்துக்கான பிரிக்ஸ் உள் ஒத்துழைப்புஎன்ற கருப்பொருளை மய்யமாக கொண்டு நடைபெற்றது.

பிரிக்ஸ் உச்சி மாநாட் டில் ரஷ்ய அதிபர் விளா டிமிர் புதின் பேசுகையில், நாம் இன்று செய்யும் வேலைகள் கணிசமான தகவும், பலனளிக்கும் வகை யில் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். பிரிக்ஸ் உறுப்பு நாடுக ளுடன் அனைத்து துறை யிலும் தொடர்ந்து நெருக் கமான ஒத்துழைப்பு வழங்க ரஷ்யா தயாராக உள்ளது என்பதை நான் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்என்றார்.


No comments:

Post a Comment