கரோனா பாதிப்பு அதிகரிப்பால் ஆஸ்திரேலியாவில் ஊரடங்கு நீட்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 31, 2021

கரோனா பாதிப்பு அதிகரிப்பால் ஆஸ்திரேலியாவில் ஊரடங்கு நீட்டிப்பு

கான்பெர்ரா, ஆக. 31- ஆஸ்தி ரேலியாகரோனா வைரஸ் 2-ஆவது அலையின் கோரப்பிடியில் சிக்கியுள் ளது. டெல்டா கரோ னாவை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாடு திணறி வருகிறது. மக்க ளின் எதிர்ப்புக்கு மத்தி யில் கடுமையான ஊர டங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ள போதிலும், கரோனாவின் தாக்கம் குறையவில்லை. இந்தநிலையில் ஆஸ்திரே லியாவின் 2-ஆவது மிகப் பெரிய நகரமான மெல் போர்னில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

70 லட்சம் மக்கள் தொகை கொண்ட மெல் போர்ன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கெனவே தொடர்ந்து 4 வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தற்போது மீண்டும் நீட் டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விக்டோ ரியா மாகாணத்தின் பிர தமர் டான் ஆண்ட்ரூஸ் கூறுகையில் ‘‘ஊரடங்கை திரும்ப பெற முடியாத அளவுக்கு மெல்போர்ன் நகரில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிக ரித்து வருகிறது. ஊரடங் குக்கு முன்பான சுதந்தி ரத்தை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறோம். மீண்டும் அந்த நாட்கள் திரும்பி வர வேண்டும் என தீவி ரமாக விரும்புகிறோம்’’ என கூறினார்.

இதற்கிடையில் ஆஸ் திரேலியாவில் 29.8.2021 அன்று ஒரே நாளில் 1,305 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு மொத்த பாதிப்பு 50 ஆயி ரத்தை கடந்து என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment