மக்களவையில் ஆ.இராசா கேள்வி!
புதுடில்லி, ஆக. 11 - கரோனா தொற்று முடக்கக் காலத்தில் திவால் மற்றும் கடன் தீர்க்க வழியில்லா கட னாளி சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அதிகரித்து உள்ளனவா? என்று மக்களவையில் தி.மு.கழகக் கொறடா ஆ.இராசா கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற மக்களவையில் கழகக் கொறடா ஆ.இராசா ஆகஸ்ட் 9 ஆம் தேதி எழுப்பிய கேள்வி வருமாறு:-
கார்பொரேட் நிறுவனங்கள் நலத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட கேள்விக்கு பதில் அளிப்பாரா?
(அ) திவால் மற்றும் கடன் அடைக்க முடியாத கடனாளி சட்டத்தின் கீழ் திவால் ஆனவராக அறி விக்கக்கோரி தாக்கல் செய்யப் பட்ட விண்ணப்பங்களின் எண் ணிக்கை கரோனா தொற்று நோய் முடக்கக் காலத்தில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை அதிகரித்துள்ளதா?
(ஆ) அவ்வாறானால் நாட்டில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அது பற்றிய விவரங்களைத் தெரிவிக்கவும்.
(இ) இத்தகைய நிறுவ னங்களுக்கு உதவி செய்ய அரசால் வழங்கப்படும் ஊக்கமளிக்கும் தூண்டு கோல் தொகுப்பு, நிதி உதவி மற்றும் திட் டங்கள் என்ன என்பதை விரிவாகத் தெரிவிக்கவும்.
இவ்வாறு ஆ.இராசா கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்குப் பதிலளித்து, புள்ளி விபரம், அமலாக்கல், திட்டம் மற்றும் கார்பொரேட் நிறுவனங் களின் நலத்துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித்சிங் அளித்த பதில் வருமாறு:
(அ) மற்றும் (ஆ): 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை யிலான காலத்தில் 2016 ஆம் ஆண்டு திவாலா மற்றும் கடன் தீர்க்க இயலாகக் கடனாளிச் சட்டத்தின் கீழ் கடனாளிகள் கார்பொரேட் நிறுவனங்கள் தாக்கல் செய்த விண் ணப்பங்கள் 126 ஆகும். அவை கார் பொரேட் நிறுவனங்களின் திவாலா தீர்மான நடை முறை (சி.அய்.ஆர்.பி.)யில் ஈடுபட அனுமதிக்கப் பட்டன. அவற்றுள் 21 கார்பொரேட் கட னாளி நிறுவனங்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவையாகும். (இ) இந்த கார்பொரேட் நிறுவனங்களின் திவாலாத் தீர்மானம் நடை முறை யின் நோக்கம் 2016ஆம் ஆண்டு திவால் மற்றும் கடன் தீர்க்க இயலாத கடனாளிச் சட்டத் தொகுப்பின் 7, 9 அல்லது 10 ஆகிய பிரிவுகளின் கீழ் சொத்துக்களின் மதிப்பை உயர்ந்தபட்சமாக அதிக மாக்குவதும் கடன்களின் வாய்ப்பு களை அனைத்துப் பங்குதாரர்களின் நலன்களும் சம அளவில் பாது காக்கப்படும் வகையில் ஏற்படுத்திக் கொடுப்பதும் ஆகும். இவ்வாறு ஒன்றிய அமைச்சர் ராவ் இந்தர் ஜித்சிங் பதில் அளித்தார்.
No comments:
Post a Comment