30 ஆயிரம் அடி உயரத்தில் குழந்தை பெற்ற பெண் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 31, 2021

30 ஆயிரம் அடி உயரத்தில் குழந்தை பெற்ற பெண்

லண்டன்,- ஆக. 31- தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின் அந்நாட்டில் இருந்து ஏராளமானோர் அகதி களாக வெளியேறி வருகின்றனர். பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரே லியா போன்ற நாடுகள் இவர்க ளுக்கு தஞ்சம் அளித்து வருகின்றன.

இந்நிலையில் காபூலில் இருந்து அய்ரோப்பிய நாடான பிரிட் டனில் உள்ள பிர்மிங்காம் நகரம் நோக்கி, துருக்கி நாட்டு விமானம் சமீபத்தில் புறப்பட்டது.அதில் சோமன் நூரி, (26) என்ற நிறைமாத கர்ப்பிணி, அவரது கணவர் தாஜ் முகமது ஹம்மத், (30), ஆகியோர் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் பயணம் செய்தனர். மேற்காசிய நாடான குவைத் வான்வெளியில், 30 ஆயிரம் அடி உயரத்தில் விமா னம் பறந்த போது, சோமன் நூரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

விமானத்தில் மருத்துவர் இல் லாததால், விமான ஊழியர்கள் பிரசவம் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சில நிமிட போராட் டத்துக்கு பின் அழகான பெண் குழந்தை பிறந்தது.அந்த குழந் தைக்கு ஹவ்வா என பெயரிடப் பட்டது.தற்காப்பு நடவடிக்கை யாக குவைத்தில் தரை இறங்கிய விமானம், பின் பிர்மிங்காம் சென் றடைந்தது.சமீபத்தில் காபூலில் இருந்து ஜெர்மனி நோக்கி பய ணித்த அமெரிக்க ராணுவ விமா னத்திலும், கர்ப்பிணி ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

No comments:

Post a Comment