டோக்கியோ, ஆக. 31- டோக்கியோ பாராலிம்பிக்கில் ஒரேநாளில் இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு குவிகிறது.
மகளிருக்கான துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் அவனி லேகாரா, ஈட்டி எறிதலில் சுமித் அண்டில் ஆகியோர் தங்கம் வென் றனர். இவர்களுடன் தேவேந் திர ஜஜாரியா, யோகேஷ் கது னியா ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், குர்ஜார் சுந்தர் சிங் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
ஜப்பானின் டோக்கியோ நக ரில் பாராலிம்பிக்ஸ் நடைபெற்று வருகிறது. இதன் 7ஆவது நாளான நேற்று (30.8.2021) ஆர்-2 மகளி ருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டேன்டிங் எஸ்எச் 1 பிரிவில் இந் தியாவின் அவனி லேகாரா இறுதி சுற்றில் தங்கப் பதக்கம் வென்றார்.
இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப் பூரை சேர்ந்த 19 வயதான அவனி லேகாரா இறுதிச் சுற்றில் 249.6 புள்ளிகள் குவித்து உலக சாத னையை சமன் செய்ததுடன் புதிய பாராலிம்பிக் சாதனையையும் நிகழ்த்தினார். மேலும் பாராலிம் பிக்ஸ் வரலாற்றில் இந்தியா சார் பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாத னையையும் படைத்துள்ளார்.
ஆடவருக்கான எஃப் 64 ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் சுமித் அண்டில் உலக சாதனையு டன் 68.55 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். அரி யானா மாநிலம் சோனிபட்டை சேர்ந்த சுமித் அண்டில் இதற்கு முன்னர் 62.88 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனை படைத்தி ருந்தார். இந்த சாதனையை அவர், பாராலிம்பிக்ஸில் 5 முறை தகர்த் தார். ஆஸ்திரேலியாவின் மைக்கல் புரியன் வெள்ளி, இலங் கையின் துலன் கொடித்துவக்கு வெண்கலம் வென்றனர்.
ஆடவருக்கான எஃப் 46 ஈட்டி எறிதலில் இந்தியாவின் தேவேந் திர ஜஜாரியா 64.35 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் பெற் றார். மற்றொரு இந்திய வீரரான குர்ஜார் சுந்தர் சிங் 64.01 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆடவருக்கான வட்டு எறிதலில் எஃப் 56 பிரிவில் இந்தியாவின் யோகேஷ் கதுனியா 44.38 மீட்டர் தூரம் எறிந்து வெள் ளிப் பதக்கம் வென்றார்.
தங்கம் வென்ற அவனி லேகாரா வுக்கு ரூ.3 கோடியும் வெள்ளி வென்ற தேவேந்திர ஜஜாரிவுக்கு ரூ.2 கோடியும் வெண்கலம் வென்ற குர்ஜார் சுந்தர் சிங்குக்கு ரூ.1 கோடி யும் பரிசுத் தொகை வழங்கப்படும் என ராஜஸ்தான் மாநில முதல மைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இந்த 3 வீரர்களும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந் தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியா 7 பதக்கங்கள் வென்று பட்டியலில் 26ஆவது இடத்தில் உள்ளது.
No comments:
Post a Comment