தாராபுரம்
"அறிவு ஆசான்" தந்தை பெரியார் அவர்களின் 143ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தாராபுரம் கழக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கழக சுவரெழுத்து பிரச்சாரம் தடம் பதித்துள்ளது.
தாராபுரம் நகர பகுதிகளான பூங்கா சாலை,உடுமலை சாலை, கோட்டைமேடு, கொளிஞ்சிவாடி, உப்புத்துறைப் பாளையம், மீனாட்சிபுரம் ஆகிய இடங்களில் தாராபுரம் கழக மாவட்ட செயலாளர் க.சண்முகம் ஒருங்கிணைப்பிலும், கணியூர்,காரத்தொழுவு, மடத்துக்குளம், குமரலிங்கம் ஆகிய ஊர்களில் தாராபுரம் கழக மாவட்ட தலைவர் க.கிருஷ்ணன் ஒருங்கிணைப்பிலும்,உடுமலைப்பேட்டை நகரத்தில் புதிய பேருந்து நிலையம்,பழைய பேருந்து நிலையம்,அரசு மருத்துவமனை சாலை,கச்சேரி வீதி ஆகிய இடங்களில் கழக சட்டத்துறை துணைச் செயலாளர் வழக்குரைஞர் ஜெ.தம்பி பிரபாகரன் தலைமையிலும் கழகத்தின் சார்பில் சுவரெழுத்து பிரச்சாரம் வீறு நடை போட்டு வருகிறது.
பகுத்தறிவாளர் கழகத்தை சேர்ந்த தாராபுரம் ஆசிரியர் செ.முத்துக்கிருஷ்ணன் தாராபுரம்,காரத்தொழுவு,கணியூர், மடத்துக்குளம்,குமரலிங்கம் ஆகிய பகுதிகளில் தனது கைவண்ணத்தில் சுவரெழுத்து பிரச்சாரத்தை செய்து கொடுத்து எழுச்சியோடு கழகப்பணி ஆற்றியுள்ளார் என அப்பகுதியினர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
திருப்பூர்
தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்தநாளையொட்டி நாடெங்கிலும் கழகத்தின் சார்பில் சுவரெழுத்து பிரச்சாரங்கள் எழுச்சியோடு நடைபெற்று வருவதன் ஒருபகுதியாக திருப்பூர் மாநகரில் கழக சுவரெழுத்து பிரச்சாரம் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாநகர், உழவர் சந்தை,பூங்கா சாலை,ஊத்துக்குளி சாலை, கருவம்பாளையம்,சின்னாண்டிபாளையம் பிரிவு, கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களில் திருப்பூர் மாவட்ட கழக தலைவர் இரா.ஆறுமுகம் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் யாழ்.ஆறுச்சாமி,மாநகர கழக செயலாளர் பா.மா.கருணாகரன் ஆகியோரது ஒருங்கிணைப்பில் சுவரெழுத்து பிரச்சாரம் சிறப்போடு செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள் பலரும் கழகப் பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு சுவரெழுத்து பிரச்சாரம் குறித்து வரவேற்பு தெரிவித்து வரு கின்றனர்.
No comments:
Post a Comment