திருவரங்கம், ஆக. 31- திருவரங்கம் நகர கழக கலந் துரையாடல் கூட்டம் 24.8.2021 ஞாயிறு காலை 11.00. மணிக்கு மாவட்டத் தலைவர் ஞா. ஆரோக்கிய ராஜ் தலைமையில் பெரியார் படிப்பகத்தில் நடை பெற்றது.
மாவட்டச் செயலா ளர் இரா.மோகன்தாஸ், பெரியார் பெருந்தொண் டர் ராமநாதன், திருவ ரங்க நகர தலைவர் கண் ணன், திருவரங்க நகர செயலாளர் இரா. முரு கன், நகர துணை செய லாளர் அண்ணாதுரை, மாவட்ட இளைஞரணி செயலாளர் தேவா, விடுதலை வாசகர் வட்ட தலைவர் ஜெயராஜ், இளைஞர் அணி சீனி. முத்தையன், விடுதலை வாசகர் வட்டம் நடரா ஜன் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் தீர்மானங்கள்.
பெரியார் மாளிகை செங்கோடன், திருவரங் கம் பிளம்பர் குமாரசாமி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் சட்டத்தை நடை முறைப்படுத்தி பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு அர்ச்சகர் உரிமை சட் டத்தை அளித்த தமிழக முதலமைச்சர் மாண்பு மிகு, மானமிகு மு. க .ஸ்டாலின் அவர்களை இந்த கலந்துரையாடல் கூட்டம் நன்றி தெரிவித்து வாழ்த்துகிறது.
சீனி.முத்தையன், கோகுல், எம். கார்த்திக், எம்.ஹரி, ஆர்.விக்னேஷ், கே.விஜய் ஆகிய 5 இளை ஞர்களை இயக்கத்திற்குப் புதிதாக இணைத்துள்ளர்.
மாவட்ட இளைஞ ரணி செயலாளர் தேவா வின் டாட்டா, ஏசி, வண் டியில் தந்தை பெரியார் படம் வைத்து மேளதா ளத்துடன் 30 இளைஞர் களோடு பெரியார் ஆசிரி யர் அவர்கள் படம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து திருவ ரங்கம் பெரியார் சிலை யில் இருந்து திருச்சி ஜங் ஷன் பெரியார் சிலை வரை யும், பிறகு திருவரங்கத்தில் 30 இடங்களிலும் கொடி யேற்ற பெரியார் படத்து டன் மேளதாளத்தோடுச் செல்வது என தீர்மானிக் கப்பட்டது.
தந்தை பெரியார் 143 ஆம் ஆண்டு பிறந்தநாள் சுவரொட்டியை திருவ ரங் கம் திருவானைக்காவல் அனைத்தும் ஒட்டுவது எனவும் முடிவானது.
காலை 8 மணிக்கு திருவரங்கம் பெரியார் சிலைக்கு மாலை அணி வித்து இனிப்பு வழங்கி விட்டு அனைத்து தோழர் களுடன் திருச்சி ஜங்ஷன் பெரியார் சிலைக்கு செல் வது என தீர்மானிக்கப்பட் டது. திருவரங்கம்-திருவா னைக்காவல் பகுதிகளில் 30 இடங்களில் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்குவது எனவும் தீர் மானிக்கப்பட்டது
கொடி ஏற்றி முடிந்த வுடன் பெரியார் படிப்ப கத்தில் நூறு தோழர்க ளுக்கு புலால் உணவு (பிரி யாணி) வழங்குவது என வும் தீர்மானிக்கப்பட்டது.
பெரியார் வாசகர் வட் டத் தலைவர் ஜெயராஜ் அய்ந்து இடங்களுக்கு புதிதாக கொடிக்கம்பம் வாங்கி அளிப்பதாக உறுதி அளித்துள்ளார். முடி வாக சீனி.முத்தையன் அவர்கள் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment